Gold Rate Today: சென்னையில் 2 நாட்களாக சரிந்த தங்கம் விலை.. இன்று ரேட் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பலரும் எதிர்பார்த்த ரெசிப்ரோக்கல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்கிடையே அவரது வரி அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை சரிந்து வருகிறது. தங்கம் விலை குறைவது வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையே இன்று தங்கம் விலை எந்த ரேட்டில் விற்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்காலம்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. பல நாட்களாகத் தங்கம் விலை சீராக ரூ.8300க்கு மேல்தான் இருந்து வந்தது. தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி காரணமாகவே தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. குறிப்பாகக் கடந்த மார்ச் 31ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலை 520 ரூபாயும், மாலை மீண்டும் 200 ரூபாயும் உயர்ந்து, ரூ.67,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8450க்கு விற்பனையானது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.68,000 தாண்டியது. ஏப்ரல் 2ம் தேதி தங்கம் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது. அன்றைய தினம் தான் அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். ஏப்ரல் 3ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் அதிகபட்சமாக ரூ.68,480க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாகக் குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் 4ம் தேதி தங்கம் விலை ரூ.67,200க்கு குறைந்த நிலையில், நேற்றைய தினம் தங்கம் விலை மேலும் குறைந்து ரூ.66,480க்கு விற்பனையானது. டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பைத் தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சரிந்து வருகிறது. இது வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்வொரு மாற்றமும் இல்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட விலைக்கே தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
2.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
1.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
31.03.2025- ஒரு சவரன் ரூ.67,600 (மாலை)
31.03.2025- ஒரு சவரன் ரூ.67,400 (காலை)
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications