Gold Rate Today: நிம்மதி கொடுத்த டிரம்ப்.. தாறுமாறாக சரியும் தங்கம் விலை.. இன்றும் விலை குறைந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.1880 குறைந்துள்ளது. இதற்குச் சர்வதேச அளவில் நடந்த இரு விஷயங்களே மேஜர் காரணமாக இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.73440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தாண்டு டிரம்ப் வந்த உடன் தங்கம் விலை பறக்க ஆரம்பித்தது, அதன் பிறகு குறையவே இல்லை. அப்படியே ஓரளவுக்குக் குறைவது போன்ற சூழல் வந்தாலும் டிரம்ப் அடுத்த ஒரு குண்டைப் போட்டு பதற்றத்தை அதிகரிப்பார். இதனால் தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ச்சியாக உயர்ந்தே வந்தது.

Gold Price Gold

தங்கம் விலை

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. அன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9470க்கு போனது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை சீராகக் குறைந்தே வருகிறது. கடந்த 11 நாட்களில் தங்கம் விலை பல நாட்கள் குறைந்துள்ளன. ஆனால், ஒரு நாள் கூட விலை அதிகரிக்கவே இல்லை.

இரு மேஜர் காரணங்கள்

இதற்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் உலக நாடுகளுக்குப் பிரதானமாகத் தங்கத்தை சப்ளை செய்யும் சுவிட்சர்லாந்தில் இருந்து வரும் தங்கத்திற்கு வரி விதிப்பதாக முதலில் டிரம்ப் கூறியிருந்தார். தங்கம் விலை எக்குத்தப்பாக உயர இதுவே பிரதானக் காரணமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு திடீரென யூடர்ன் போட்ட அவர் சுவிட்சர்லாந்து தங்கத்திற்கு எல்லாம் வரி இல்லை என சொல்லிவிட்டார். இதனால் தங்கம் விலை சட்டென சரிய ஆரம்பித்தது.

அதேபோல உக்ரைன் மோதலும் மெல்ல முடிவை நோக்கிச் செல்கிறது. ஏற்கனவே டிரம்ப் - புதின் மீட்டிங் கடந்த வாரம் அலாஸ்காவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பியத் தலைவர்களையும் டிரம்ப் சந்தித்துப் பேசி வருகிறார். இதுவரை எல்லாமே சுமுகமாகவே போய் வருகிறது. இதுவும் கூட தங்கம் விலை தொடர்ந்து குறையக் காரணமாக இருக்கிறது.

தொடர் சரிவு

இப்படிக் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தங்கம் விலை சரிவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், இப்போது ஆவணி மாதம் பிறந்துள்ளதால் நகை வாங்கப் பலரும் திட்டமிட்டு வருகிறார்கள். கல்யாண சீசனும் ஆரம்பிக்கும் நிலையில், இப்போது தங்கத்தை வாங்கினால் சரியாக இருக்கும் என்றே கணக்கு போட்டு வரிகிறார்கள். அதற்கேற்பத் தங்கம் விலை குறைந்து வருகிறது.

நேற்றைய தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாகக் குறைந்தது.. நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,235க்கு விற்பனையானது. அதாவது ஒரு சவரன் ₹73,880க்கு விற்பனையானது. இன்றைய தினமும் தங்கம் விலை குறைந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.73440க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.9180க்கு விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை:

20.08.2025 (இன்று)- ஒரு சவரன் ரூ.73,440

19.08.2025 (நேற்று)- ஒரு சவரன் ரூ.73,880

18.08.2025 ஒரு சவரன் ரூ.74,200

17.08.2025 ஒரு சவரன் ரூ.74,200

16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200

15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240

14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320

12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360

11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000

10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+