Gold Rate Today: அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு! ஒரு கிராம் தங்கம் விலை என்ன?
சென்னை: கடந்த சில நாட்களாகவே நமது நாட்டில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.9000க்கு மேல் சீராக நீடிக்கிறது. இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. டிரம்ப் வந்த பிறகும் அவர் செய்த பல செயல்களால் தங்கம் விலை தாறுமாறாக உயர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ரெசிப்ரோக்கல் வரி, சீனா உடனான வர்த்தகப் போர் காரணங்களால் தங்கம் விலை உயர்ந்தே வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக நிலைமை மாறிவிட்டது. தங்கம் விலை ஏறவும் இல்லை.. குறையவும் இல்லை.!

தங்கம் விலை
தங்கம் விலை நிலையாகவே இருந்து வருகிறது. இப்படி இந்தியாவில் தங்கம் விலையில் 10 நாட்களாக ஏற்றம் இறக்கம் என இரண்டுமே மாறி மாறி இருந்தது. மத்தியக் கிழக்கில் மோதல், மீண்டும் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி எனப் பரபரப்பு அதிகரித்த போதிலும் தங்கம் விலை பெரியளவில் ஏறவில்லை.. தங்கம் மார்கெட் இந்தாண்டு அளவு கடந்து உயர்ந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதன் காரணமாகவே பலரும் தங்கம் விலை குறையலாம் என்கிறார்கள்.
தற்போதைய சூழலில் ரஷ்யா உக்ரைன் மோதலைத் தவிர வேறு புவிசார் அரசியல் மோதல்கள் பெரிதாக எதுவுமில்லை. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு சீராகக் குறைந்து வருகிறது. அதேபோல டாலர் மதிப்பு உயர ஆரம்பித்துள்ளது. பொதுவாக டாலர் மதிப்பு அதிகரித்தால் தங்கம் விலை சரியும். அதுதான் இப்போது நடக்கிறது. டாலர் மதிப்பு அதிகரிப்பதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலையாக இருக்கிறது.
ஆபரண தங்கம்
கடந்த மாதம் இறுதியில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.71,320ஆக இருந்தது. அதன் பிறகு அது மெல்ல உயர்ந்தே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1000க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.72,160ஆக இருந்தது. ஜூலை 2ம் தேதி அது 72,520ஆகவும் ஜூலை 3ம் தேதி அதிகபட்சமாக 72,840 வரை போனது.
கடந்த சில நாட்கள்
பிறகு அது மெல்ல ரூ.72,480க்கு சனிக்கிழமை செட்டிலானது. கடந்த இரு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.440 குறைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72,160-க்கு விற்பனையானது. ஜூலை 2-ம் தேதி ரூ.72,520 ஆகவும், ஜூலை 3-ம் தேதி அதிகபட்சமாக ரூ.72,840 வரையிலும் உயர்ந்தது. அதன் பிறகு மூன்று நாட்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு கிட்டதட்ட ரூ.400 குறைந்தது. அதாவது ஜூலை 7ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.72,080க்கு சரிந்தது. அதன் பிறகு கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கம் சேர்ந்தே இருக்கிறது.
இன்று விலை என்ன
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ 72,160க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ 9,020க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.72,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9075க்கு விற்பனை செய்யப்படுகிறது
கடந்த சில நாட்களாகத் தங்கம் கடந்த வந்த பாதை
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ.71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ.71,440












Click it and Unblock the Notifications