Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. 3 நாட்களில் ரூ.1100க்கு மேல் உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்ந்துள்ளது. டிரம்ப் மீண்டும் வரி விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், தங்கம் விலை உயர ஆரம்பித்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலை இன்னும் சற்று உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு ஆரம்பித்தது முதலே தங்கம் விலை மிகப் பெரியளவில் உயர்ந்துவிட்டது. குறிப்பாக அதிபரான பிறகு டிரம்ப் செய்து வரும் காரணங்களால் தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே உயர்ந்து வருகிறது. அவரது ரெசிப்ரோக்கல் வரி, சீனா உடனான வர்த்தக மோதல்கள் காரணமாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

Gold Rate Today in Chennai 22 carat Gold price Today July 13

தங்கம் விலை குறையலையே

அதேநேரம் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை நிலையாக இருந்தது. இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சத்திற்குப் போன போதும் கூட தங்கம் விலை பெரியளவில் உயரவே இல்லை. இதனால் தங்கம் விலை உச்சத்திற்குப் போய்விட்டது.. இனிமேல் இந்தாண்டு பெரியளவில் உயராது என்றே பலரும் கூறினர். பல வல்லுநர்களும் கூட தங்கம் விலை 30% வரை குறையும் என்று கூறியிருந்தனர்.

அதற்கேற்றார் போலக் கடந்த மாத இறுதி தொடங்கி சுமார் 2 வாரங்கள் தங்கம் விலை நிலையாகவே இருந்தது. பெரியளவில் ஏற்றமும் இல்லை.. இறக்கமும் இல்லை என்ற சூழலே இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.9000களிலேயே இருந்தது. இதனால் தங்கம் விலை இனி உயராது என்ற நம்பிக்கையில் மக்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டனர். ஆனால், நிலைமை உடனடியாக மாறிவிட்டது.

உயரும் தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் உயர்ந்தே வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்துள்ளது. ஜூலை 7ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.72,080ஆக இருந்தது. அதன் பிறகு ஜூலை 8 முதல் அடுத்த 5 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டுமே தங்கம் விலை சரிந்தது. மற்ற எல்லா நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தே இருக்கிறது.

இன்றைய விலை

நேற்று கூட தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9,140க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.73,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9140க்கும், ஒரு சவரன் ரூ.73,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களில் தங்கம் விலை இந்தளவுக்கு உயர்ந்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

தங்கம் விலை

12.07.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+