Gold Rate Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம்.. ரூ.400 உயர்வு.. ஒரு சவரன் ரூ.74,000க்கு விற்பனை!
சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் வந்த பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது.

மே மாதம் தொடக்கத்தில் உச்சத்திற்கு சென்ற நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. இதன்பின் மே மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியது. திருமண சீசன் தொடங்கிய போது மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால் தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் மே மாதத்தின் நிலை உருவாகுமோ என்ற விவாதிக்க தொடங்கினர்.
ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இதற்கு சர்வதேச சந்தையும் ஒரு காரணமாகும். நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து, ரூ.9,200க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் 3வது நாளாக இன்று மீண்டும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.9,250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
17.06.2025 - ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360












Click it and Unblock the Notifications