Gold Rate Today: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 உயர்வு.. ஒரு சவரன் ரூ.74,120க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்திருக்கிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.9,265க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை நெருங்கி இருப்பதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வந்த பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது.

gold price gold

தங்கம் விலை

மே மாதம் தொடக்கத்தில் உச்சத்திற்கு சென்ற நிலையில், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. ஆனால் மே மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் தங்கம் விலை சரிந்தது. திருமண சீசன் தொடங்கிய போது மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

உயரும் தங்கம் விலை

ஆனால் தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தன. ஒரு சவரன் தங்கம் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சாமானிய மக்கள் பலரும் சோகம் அடைந்தனர்.

2வது நாளாக உயர்வு

இந்த வாரத்தை பொறுத்தவரை முதல் 2 நாட்கள் குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.9,250க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் உயர்வை சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.9,265க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த சில நாட்களாக தங்கம் விலை

18.06.2025 - ஒரு சவரன் ரூ.74,000

17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600

16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440

15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560

14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560

13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360

12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800

11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160

10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560

09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640

08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840

07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840

06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040

05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040

04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720

03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640

02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600

01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+