Gold Rate Today: டிரம்ப் யூடர்னால் சரிந்த தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர தொடங்கியது!
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விவகாரத்தில் மொத்தமாக யூடர்ன் போட்டுவிட்டார். சீனா மீது அவர் விதித்த வரிகள் 90 நாட்கள் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் மோதலும் முடிந்துவிட்டது. இதனால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வரும் நிலையில், இன்றும் அது தொடர வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருந்தது. இருப்பினும், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
எப்போதுமே மிடில் கிளாஸ் மக்களாக இருந்தாலும் சரி ஏழை மக்களாக இருந்தாலும் சரி தங்கத்தையே முதல் சேமிப்பாகக் கருதுவார்கள். நீண்ட கால நோக்கில் தங்கம் விலை நல்ல லாபத்தை வரும் என்பதாலேயே தங்கத்தை வாங்குவார்கள். அதற்கேற்ப கடந்த பல ஆண்டுகளை எடுத்துப் பார்த்தால் தங்கம் விலை சீரான லாபத்தையே கொடுத்து வந்துள்ளது.

தங்கம் விலை
அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு வாங்கவே முடியாத அளவுக்குத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இடையில் டிரம்பும் சேர்ந்து வரிகளை அறிவிக்கத் தங்கம் விலை உச்சத்திற்குப் பறந்தது. கடந்த மாதம் கடைசியில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000ஐ கூட தாண்டியது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை கொஞ்சம் குறைந்தே வந்தது.
இடையில் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட போது தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. இந்த மோதல் எத்தனை காலம் தொடருமோ தங்கம் விலை அதிகரிக்குமோ என மக்கள் பதறினர். இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த மோதல் சில நாட்கள் மட்டுமே நீடித்த நிலையில், இரு நாடுகளும் மோதலை கைவிட ஒப்புக்கொண்டன. இதனால் தங்கம் விலையும் சற்று குறைந்தது.
அமெரிக்கா சீனா உறவு
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. அதாவது வரி விவகாரத்தில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருந்தார். அதாவது ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப், சீனா மீது மட்டும் 100 சதவிகிதத்திற்கு மேல் வரிகளை விதித்தார். பதிலும் சீனாவும் வரிகளை அறிவிக்கவே அது வர்த்தக போர் போன்ற நிலை உருவானது.
டிரம்ப் வரிகள் இல்லை
இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவும் சீனாவும் உடன்பாட்டிற்கு வந்தது. அதன்படி டிரம்ப் போட்ட அனைத்து வரிகளும் வாபஸ் பெறப்பட்டது. பைடன் காலத்தில் இருந்த வரிகள் மட்டுமே தொடரும் என அறிவிக்கப்பட்டது. இது மார்கெட்டிற்கு மிகப் பெரிய பிளஸ்ஸாக பார்க்கப்பட்டது. பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில், இதனால் தங்கம் விலை சரிந்தது.
குறையும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ.3,500 வரை குறைந்துள்ளது. கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.72,360ஆக இருந்த நிலையில், அது மெல்லக் குறைந்து மே 12ம் தேதி ரூ.70,000ஐ தொட்டது. பிறகு மீண்டும் சற்று அதிகரித்த தங்கம் விலை மே 14ல் ரூ.70840ஆக இருந்தது. இப்போது இரண்டு நாட்களாகத் தங்கம் விலை குறையும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.68,880க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சூழல் சீராகிவிட்ட நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு உயர்ந்துள்ளது. அதேபோல சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (இன்று)
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880 (நேற்று)
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications