Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. ரூ.70 ஆயிரத்தை தாண்டியது.! பொதுமக்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் தங்கம் விலை கணிசமான அளவுக்கு குறைந்தே இருந்தது. அதேநேரம் சர்வதேச சந்தையில் வார இறுதியில் தங்கம் விலை பெரியளவு சரிந்த நிலையில், அது இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. இருப்பினும், இன்றைய தினம் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது

டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சமயத்தில் தங்கம் விலை ஓரளவுக்குக் குறைந்தது. அவர் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பார். இதன் மூலம் மார்க்கெட் சீராகும் அதேநேரம் தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்த்தார்கள்.

Gold Price Gold

புவிசார் அரசியல்

ஆனால், அவர் அதிபராகப் பதவியேற்ற பிறகு செய்தது வேறு. அவர் எப்போது என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்றே யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. குறிப்பாகக் கடந்த இரண்டு மாதங்களாக அவர் இஷ்டத்திற்கு அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறார். இதனால் புவிசார் அரசியலில் குழப்பம் ஏற்படும் நிலையில், தங்கம் விலை படுவேகமாக உயர்கிறது.

குறிப்பாகக் கடந்த ஏப்ரல் மாதம் அவர் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அடுத்த வாரமே அதை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரிகளை மட்டும் உயர்த்திக் கொண்டே போனார். இடையில் சீனாவும் டிரம்பிற்கு பதிலடி கொடுத்தது. இதனால் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை கடந்த மாத இறுதியில் ஒரு கட்டத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000ஐ கூட தாண்டியது.

தங்கம் விலை

ஆனால், அதன் பிறகு புவிசார் அரசியல் மாறியது. ஒரு பக்கம் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக மோதல் முடிவுக்கு வந்தது. அதேபோல இந்தியா பாகிஸ்தான் மோதலும் கூட சில நாட்களில் முடிவுக்கு வந்தது. இதனால் தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது. கடந்த மே 15ம் தேதி சவரனுக்கு ரூ.68,880க்கு விற்கப்பட்ட ஆபரணத் தங்கம் ஒரு சவரன் அதன் பிறகு வெள்ளிக்கிழமை ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தை

அதன் பிறகு கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருக்கிறது.. அதேநேரம் சர்வதேச சந்தையில் இந்த வார இறுதியில் தங்கம் விலை 25 டாலர் வரை குறைந்தது. குறிப்பாகச் சனிக்கிழமை மட்டும் சுமார் 1.1% வரை குறைந்தது. இதனால் அது இந்தியச் சந்தையிலும் இன்று எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8755க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

19.05.2025- ஒரு சவரன் ரூ.70,040 (இன்று)
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (நேற்று)
17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+