Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! சென்னையில் ஒரு சவரன் மீண்டும் ரூ.71,000ஐ தாண்டியது
சென்னை: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தங்கத்தை இப்போதே வாங்கலாமா.. இல்லை கொஞ்ச நாள் காத்திருக்கலாமா என்பதில் மக்களுக்குக் குழப்பம் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நமது நாட்டில் தங்கத்திற்குத் தனியாக எப்போதும் மக்களிடையே சென்டிமென்ட் இருக்கும்.. சேமிப்பு என்பதைத் தாண்டி அது கலாச்சார ரீதியாகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கல்யாணம், காது குத்து என எந்தவொரு நிகழ்வானாலும் தங்கத்திற்கு மிக முக்கியமான இடம் நமது கலாச்சாரத்தில் இருக்கவே செய்கிறது.

தங்கம் விலை
இந்த தங்கம் விலை கொரோனாவுக்கு முன்பு வரை சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், அதன் பிறகு எகிறிப் பறக்கத் தொடங்கிய தங்கம் விலை குறையவே இல்லை. இடையில் சில காலம் குறைந்தாலும் கூட பெரியளவில் தங்கம் விலை குறையவில்லை. இதனால் மிடில் கிளாஸ் மக்களும் கூட தாங்கத்தை வாங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
கடந்த மாதம் பல்வேறு காரணங்களால் சென்னையில் ஒரு கிராம் தங்கமே கூட ரூ.9000-ஐ கடந்த மாதம் தாண்டியிருந்தது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை சற்றே குறைந்தது. கடந்த மே 15ம் தேதி குறைந்தபட்சமாக ஆபரணத் தங்கம் ரூ.68,800ஐ எட்டியது. கடந்த மே 16ல் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை, அதன் பிறகு எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ரூ.69,760ல் தொடர்ந்தது.
குழப்பும் தங்கம் விலை
இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. மறுபுறம் நேற்றைய தினம் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.8,710க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது கடந்த 10 நாட்களில் தங்கம் விலை 3 நாள் உயர்ந்துள்ளது, 4 நாள் குறைந்துள்ளது, 3 நாள் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இதுபோல தங்கம் விலை ஏற்றம்- இறக்கம் என மாறி மாறி இருப்பதால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்தது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.220 உயர்ந்து ரூ.8930க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
21.05.2025- ஒரு சவரன் ரூ.71,440 (இன்று)
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680 (நேற்று)
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360












Click it and Unblock the Notifications