Gold Rate Today: ஒரு வாரமாகவே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று ரேட் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்தியாவில் திருமண சீசனும் ஆரம்பித்துவிட்ட நிலையில், தங்கத்தை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஓரளவுக்குச் சீராகியுள்ள நிலையில், இன்று தங்கம் விலை நிலையானதாக இருக்கிறது. தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

இந்தியாவில் தங்கம் என்பது ரொம்பவே முக்கியமானது. முதலீடு ரீதியாகவும் தங்கத்தை முக்கியமான ஒன்றாகப் பார்ப்பார்கள். அதைத் தாண்டி நமது வாழ்க்கையிலும் தங்கத்திற்கு மிக முக்கியமான ஒரு இடம் இருக்கிறது. நமது நாட்டில் பிறப்பு முதல் ஒவ்வொரு நல்ல காரியங்களாலும் தங்கத்திற்கு முக்கியமான இடம் இருக்கிறது.

Gold Price Gold

தங்கம்

அந்தளவுக்கு இந்தியர்களின் வாழ்கையில் முக்கியமானதாக இருக்கும் தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களுமே கூட தங்கத்தை வாங்க முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். புவிசார் அரசியல், வர்த்தக போர், சர்வதேச மோதல்கள், பொருளாதார சூழல் எனப் பல காரணங்களால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாக அது புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது என்றே சொல்லலாம். சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,000ஐ தாண்டிவிட்டது. இதனால் தங்கத்தை வாங்குவதற்கு முன்பே பல முறை யோசிக்க வேண்டி இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது.

தங்கம் விலை

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200 விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து, ரூ.10,150க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஓரளவுக்கு நிலையாக இருக்கும் சூழலில், அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவில் இன்று தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. நேற்று விற்கப்பட்ட விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

10.09.2025 (இன்று)- ஒரு சவரன் ரூ.81,200

09.09.2025 (நேற்று)- ஒரு சவரன் ரூ.81,200

08.09.2025 (பிற்பகல்)- ஒரு சவரன் ரூ.80,480

08.09.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.79,760

07.09.2025 - ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+