Gold Rate Today: இன்று திடீர் ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை .. அமெரிக்க ரிப்போர்ட்டால் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?
சென்னை: இந்தியாவில் கடந்த சில காலமாகவே வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்து வந்தது. பல நாட்களுக்குப் பிறகு நேற்றைய தினம் தான் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் இன்றும் தங்கம் விலை நிலையாக இருப்பதால் இந்தியாவிலும் தங்கம் விலையில் மாற்றமில்லை. இரண்டாவது நாளாக தங்கம் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கல் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குத் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பொருளாதாரம் தொடங்கி புவிசார் அரசியல் வரை இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆபரண தங்கம்
இந்தியாவில் சமீபத்தில் தான் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10,000ஐ தாண்டியது. நமது நாட்டில் இப்போது தான் திருமண சீசன் ஆகும்.. திருமணம் காரணமாகப் பொதுமக்கள் அதிகளவில் தங்கம் வாங்கும் சூழலில், இந்த நேரத்தில் தங்கம் உச்சம் தொட்டிருப்பது மக்களுக்கு பெரும் சிரமத்தையே தருவதாக இருக்கிறது. விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளதால் அதற்கேற்ப மக்கள் திட்டமிட வேண்டி இருக்கிறது.
நேற்று முன்தினம் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது.. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குச் சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.81,200க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.10,150க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலையானதாக இருந்த சூழலில், இந்தியாவிலும் அது எதிரொலித்தது.
அமெரிக்காவின் டேட்டா
அமெரிக்காவில் இன்று பணவீக்கம் தொடர்பான முக்கியமான டேட்டா வெளியாகிறது. அங்குப் பணவீக்கம் என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பது தொடர்பான முடிவை எடுக்கும். இதனால் இந்த டேட்டாவை பொறுத்தே தங்கம் விலையில் நாளையில் இருந்து மாற்றம் இருக்கும்.
ஆனால், இன்றைய தினமும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இல்லாமல் தொடர்கிறது. இதனால் இன்றைய தினம் இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையில் மாற்றமில்லை.. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.81,200 விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.10,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
11.09.2025 (இன்று)- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025 (நேற்று)- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025 - ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025 (பிற்பகல்)- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025 - ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640












Click it and Unblock the Notifications