Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று ரேட் குறைந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து ரூ.10,000ஐ தாண்டிவிட்டது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் கூட தங்கத்தை வாங்குவதற்குப் பல முறை யோசிக்க வேண்டி இருக்கிறது. இதற்கிடையே வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.80 குறைந்து, ரூ.81,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நம் அனைவருக்கும் தெரியும் இந்தியாவில் தங்கம் என்பது முதலீடு மட்டுமில்லை.. கலாச்சார ரீதியாகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா சுப காரியங்களிலும் தங்கத்திற்கு முக்கியமான பங்கு இருக்கும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கத்தைத் தொடர்ச்சியாக வாங்கி வருவார்கள். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் தங்கம் விலை எங்கோ உயர்ந்து உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் பொதுமக்களால் தங்கத்தை பெரியளவில் வாங்க முடியவில்லை.

Gold Price Gold

உயரும் தங்கம் விலை

அமெரிக்காவின் வரிகள், டிரம்ப் அரசியல் உள்ளிட்டவையே தங்கம் விலை உச்சம் தொட முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களாலும் கூட தங்கத்தை வாங்க முடியவில்லை. இந்தியாவில் இப்போது வழக்கமாகவே திருமண சீசன் காரணமாகத் தங்கம் விற்பனை அதிகரிக்கும். ஆனால், இப்போது விலை உயர்வால் பொதுமக்களால் பழையபடி தங்கத்தை வாங்க முடியவில்லை. இதனால் மக்கள் வேதனையில் இருக்கிறார்கள். எப்போ தான் விலை குறையும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வாய்ப்பே இல்லை

ஆனால், தற்போதைய சூழலில் விலை குறைவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பது போலவே இருக்கிறது. ஒரு பக்கம் இந்தியா மீதான அமெரிக்க வரி தொடர்கிறது. அதேபோல உக்ரைன் ரஷ்யா மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இது அனைத்தையும் விட அமெரிக்க மத்திய வங்கி நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் எனத் தெரிகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை உயரும். எனவே, இந்த முறையும் அமெரிக்க மத்திய வங்கி முடிவால் தங்கம் விலை கணிசமாக உயரவே போகிறது.

விலை என்ன

நேற்று முன்தினம் செப்டம்பர் 13ம் தேதி தான் பல நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை ஓரளவுக்குக் குறைந்திருந்தது. அன்றைய தினம் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ 20 குறைந்து ரூ 10,220க்கு விற்பனையானது. அதாவது சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ 81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை லேசாக குறைந்த நிலையில், அது இந்தியாவிலும் தொடர்ந்தது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை குறைந்தது.. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.80 குறைந்து, ரூ.81,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.10,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை

15.09.2025 (இன்று)- ஒரு சவரன் ரூ.81,680

14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920

11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

10.09.2025 - ஒரு சவரன் ரூ.81,200

09.09.2025 - ஒரு சவரன் ரூ.81,200

08.09.2025 (பிற்பகல்)- ஒரு சவரன் ரூ.80,480

08.09.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.79,760

07.09.2025 - ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+