Gold Rate Today: இன்று திடீரென குறைந்த தங்கம் விலை! அமெரிக்காவின் முடிவுக்கு காத்திருக்கும் தங்க மார்கெட்?
சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. தொடர்ச்சியாகச் சில நாட்கள் உயர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை, சில நாட்கள் இலேசாகக் குறைந்தும் வருகிறது. அதன்படி நேற்று உச்சத்திற்குப் போன தங்கம் இன்று இலேசாகக் குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.80 குறைந்து, ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் இப்போது திருமண சீசன். நம்மை சுற்றியே பல திருமண நிகழ்வுகளை நடப்பதை நாம் பார்ப்போம். மேலும், பண்டிகைக் காலமும் சீக்கிரமே தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் அதிகமாகத் தங்கம் வாங்குவார்கள். ஆனால், சமீப காலங்களில் தங்கம் விலை உயர்ந்து எங்கேயோ போய்விட்டதால் பொதுமக்களால் தங்கத்தை வாங்க முடிவதில்லை.

காரணம்
தங்கம் விலை உயரச் சர்வதேச அரசியலே பிரதானக் காரணமாக இருக்கிறது. முடிவுக்கு வராத போர், நிலையில்லாத பொருளாதாரம், குழப்பம் டிரம்ப் கொள்கைகள் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் மிடில் கிளாஸ் மக்களாலும் கூட தங்கத்தை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. எப்போது தான் விலை குறையும் என்றே மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
அமெரிக்கா மீட்டிங்
இன்றைய தினம் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்நாட்டு மத்திய வங்கி எடுக்கும் முடிவைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கும். இன்றைய தினம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை எகிறும். இல்லை என்றால் தங்கம் விலை சற்று குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய நேரப்படி இன்றிரவு நடக்கும் கூட்டத்தைப் பொறுத்தே அடுத்த சில நாட்களுக்குத் தங்கத்தின் மூவ்மெண்ட் இருக்கும்.
விலை என்ன
நேற்று செப்டம்பர் 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ 82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே இன்று தங்கம் விலை லேசாக குறைந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ 10 குறைந்து ரூ.10,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து, ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025 - ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025 - ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025 (பிற்பகல்)- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025 - ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications