Gold Rate Today: 4 நாட்களுக்குப் பிறகு எகிறிய தங்கம் விலை.. சென்னையில் இன்றைய ரேட் என்ன?
சென்னை: இன்று (அக்டோபர் 24) சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ.10 உயர்ந்து, ரூ.13,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை நிலவரம்
தங்கத்தின் மீதான முதலீடுகள் மேலும் குறைந்தால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ வட்டி உயர்வும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலை அக்டோபர் மாதத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 19) தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 4 நாட்களாக
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
புதன்கிழமை (அக்டோபர் 21) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 175 ரூபாய் குறைந்து 13,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் - இன்றைய விலை
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.220-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,20,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480
22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720


Click it and Unblock the Notifications
