Gold Rate Today: அடுத்த நாளே அதிர்ச்சி கொடுத்த தங்கம்.. மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை!
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,840க்கு விற்பனை ஆகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை திடீரென்று குறைந்தது. அதேபோன்ற அறிவிப்பு இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதையும் மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. இதனால் வழக்கம்போல் தினமும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது தங்கம் விலை.
அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறையத் தொடங்கியுள்ள அதன் தாக்கம் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. கடன் பத்திரங்களை விற்று, அவற்றை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது தங்கம் விலை.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது. தைப்பூச நாளான செவ்வாய்க்க்கிழமை சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.640 வரை உயர்ந்து ரூ.64,480க்கு விற்பனையானது. இதன்மூலம் முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.8 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில், நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.960 குறைந்து ரூ.63,520க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.120 வரை குறைந்து ரூ.7,940க்கு விற்பனையானது. சமீப நாட்களாக தொடர்ந்து ஏறி வந்த தங்கம் திடீரென குறைந்தது நகைப் பிரியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது. இன்று வியாழக்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ரூ. 63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,980 ஆக உள்ளது.
அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.வெள்ளி விலையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
நேற்று12.02.2025 ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025 ஒரு சவரன் ரூ.64,480
10.02.2025 ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (மத்திய பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (மத்திய பட்ஜெட்டுக்கு முன்)












Click it and Unblock the Notifications