Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: மீண்டும் மீண்டுமா? கடைசி நாளில் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.5,200 உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, 1,21,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சவரனுக்கு மேலும் ரூ.2,800 கூடியுள்ளது. ஒரே நாளில் ரூ.5,200 உயர்வு கண்டு ஒரு சவரன் ரூபாய் 1,24,400க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது.

gold price gold

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சம் தொட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஆண்டு இறுதியில் சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டது. இது தங்க நகை பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது.

அதற்கேற்ப இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தது. ஒரு சவரன் 1 லட்சத்து 19 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக லேசாக குறைந்தது.

கடந்த சில நாட்களாக

நேற்று முன்தினம் சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.14.920-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று விலை தாறுமாறு

இந்நிலையில் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான இன்று, தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூபாய் 2,400 உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1,21,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூபாய் 300 உயர்ந்து, ரூபாய் 15,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சவரனுக்கு மேலும் ரூ.2,800 கூடி உள்ளது. ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்துள்ளது தங்கம் விலை. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 15,500க்கும் 1 சவரன் ரூ.1,24,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூபாய் 5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.300-க்கும். ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்கள் நிலவரம்

28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (தற்போது)

28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (இன்று காலை)

27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200 (நேற்று)

26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360

25.02.2026 - ஒரு சவன் ரூ.1,19,440

24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120

23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000

18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840

17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560

16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520

15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200

12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800

11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640

09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200

08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+