Gold Rate Today: மீண்டும் உச்சம் தொட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்து, மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 65 உயர்ந்து ரூ.9,470க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. அமெரிக்கா, இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை ஏற்ற இறக்கம்
ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தங்கம் விலை முதல் முறையாக சவரனுக்கு ரூ.75,000-ஐ கடந்தது. தொடர்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி ரூ.75,760 என தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
அதன் பிறகு தொடர்ந்து தங்கம் விலை 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து கொண்டே வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் தற்போது மீண்டும் வேகமாக உயரத் தொடங்கி உள்ளது தங்கம்.
கடந்த சில நாட்களாக
ஆகஸ்ட் 27 ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,390க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.75,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று ஆகஸ்ட் 28ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,405க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.75,240க்கும் விற்பனை ஆனது.
இன்று மீண்டும் உச்சம் தொட்டது
இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 65 உயர்ந்து ரூ.9,470க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை நிலவரம்
29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760
28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120
26.08.2025-ஒரு சவரன் ரூ.74,840
25.08.2025-ஒரு சவரன் ரூ.74,440
24.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
23.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
22.08.2025-ஒரு சவரன் ரூ.73,720
21.08.2025-ஒரு சவரன் ரூ.73,840
20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440
19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200












Click it and Unblock the Notifications