Today Gold Rate: தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளில் நகைப் பிரியர்களுக்கு செம குஷி!
சென்னை: தங்கம் விலை நடப்பு ஆண்டின் துவக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. பின்னர் கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் உயராமல் இருந்து வந்த தங்கம் விலை கடந்த வாரம் முதல் மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
தங்கம் விலை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆண்டின் துவக்கத்தில் ரூ.54 ஆயிரமாக இருந்த தங்கம் விலை சுமார் 5 மாதங்களுக்குள் ரூ.20 ஆயிரம் உயர்ந்து மக்களை அதிர வைத்தது. சர்வதேச அளவில் நீடிக்கும் போர் பதற்றம், வரி பிரச்சினை போன்றவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் விலை கடுமையாக உயர்ந்ததாக கூறப்பட்டது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
எனினும், இடையில் கொஞ்சம் குறைந்தது. இதனால், தங்க நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 11- ம் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த வெளிக்கிழமை அதன் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது.
ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் 12 ஆம் தேதி விற்பனை ஆன நிலையில், 13 ஆம் தேதி நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 295-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.74 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
75 ஆயிரத்தை நெருங்குகிறது
கடந்த 6 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டி பின்னர் விலை குறைந்ததால், ரூ.71 ஆயிரத்துக்கு வந்தது. மீண்டும் விலை அதிகரித்ததால், ரூ.72 ஆயிரத்தை கடந்த 11 ஆம் தேதி கடந்த நிலையில், மீண்டும் 73 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது. சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560 க்கு விற்பனையானது.
ஞாயிற்றுக்கிழமை நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. எனவே இன்றைய தங்கம் விலை எப்படி இருக்குமோ என நகை பிரியர்கள் திகிலுடன் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305 க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360












Click it and Unblock the Notifications