மூச்சு முட்ட போகுது.. தங்கம் வாங்குபவர்களுக்கு பிரபல எக்ஸ்பர்ட் சொன்ன மெசேஜ்.. நோட் பண்ணுங்க!
சென்னை: ஈரான் இஸ்ரேல் போர் காரணமாகவும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. இந்த போர்களால் பங்கு சந்தைகள் மூச்சு முட்ட தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது.
அமெரிக்காவில் இன்றும் உயர்ந்த ஸ்பாட் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் $3,442.09 ஆக 0.3% உயர்ந்தது. இது ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிறகு கண்ட அதிகபட்ச விலையாகும். அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலையும் 0.3% உயர்ந்து $3,461.90 ஆக இருந்தது.

பாதுகாப்பான முதலீடாக தங்கம்
புவிசார் அரசியல் காரணிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தங்கம் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து மீண்டும் தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்து வருகிறது . இனி தொடர்ந்து கண்டிப்பாக உயரும்.
ஆசிய பசிபிக் மூத்த சந்தை ஆய்வாளர் கெல்வின் வாங் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் காரணமாக அரசியல் ஆபத்துகள் அதிகரித்திருக்கின்றன. இது தங்கத்திற்கான பாதுகாப்பான முதலீட்டு தேவையை உயர்த்தியுள்ளது. உலக அளவில் பங்குச்சந்தைகள் மூச்சு முட்ட தொடங்கி உள்ளன. இதனால் பங்கு சந்தைகளில் கடுமையான சரிவுகள் ஏற்படும். போர் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். போர் தீவிரம் அடைய அடைய தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். அதனால் இப்போதே முடிந்த அளவு தங்கம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் .
தற்போது $3,400க்கு மேல் தங்கம் விலை உள்ளது. குறுகிய காலத்தில் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. $3,500 என்ற அளவில் எல்லாம் தாண்டி போய்க்கொண்டே இருக்கும். அந்த அளவைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டவும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்ததால், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. பொதுவாக தங்கம் பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்பு காலங்களில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. மேலும், வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது தங்கம் சிறப்பாக செயல்படும், என்று ஆசிய பசிபிக் மூத்த சந்தை ஆய்வாளர் கெல்வின் வாங் தெரிவித்துள்ளார்.
Goldman Sachs கணிப்பின்படி, மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்முதல் காரணமாக, 2025 இறுதிக்குள் தங்கத்தின் விலை $3,700/toz ஆகவும், 2026 நடுப்பகுதியில் $4,000 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Bank of America அடுத்த 12 மாதங்களில் தங்கம் $4,000/oz வரை உயரும் என்று கணித்துள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,151 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,305 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,660 ஆகவும் உள்ளது.
-
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications