வேலையை காட்டிய சீனா.. சர்ரென குறையும் தங்கம்.. கதறும் சர்வதேச மார்க்கெட்.. இது எதிர்பார்க்காத ஷாக்
பெய்ஜிங்: சர்வதேச அளவில் உலக நாடுகள் தங்கம் வாங்குவது தங்கத்தின் விலையை பாதிக்கும். அதாவது ஒரு நாடு அதிகம் தங்கம் வாங்கினால்.. அதாவது சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை உயரும்.
உலக அளவில் இப்படி தங்கம் விலை உயர் முக்கிய காரணங்களில் ஒன்று சீனா. அங்கே தங்கம் குவிக்கப்பட்டது. சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்தது. மார்ச் 2025 நிலவரப்படி சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு தோராயமாக 2,292 மெட்ரிக் டன்கள் ஆகும். இது சீனாவை உலகின் முன்னணி தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது, சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தங்க இருப்புக்கள் சீராக அதிகரித்து வருகின்றன.

சீன மக்கள் வங்கி (PBoC) அதன் தங்க இருப்பை தீவிரமாக உயர்த்தி வந்தது, பிப்ரவரி 2025 இல் 50 டன்களும் மார்ச் 2025 இல் 5 டன்களும் அதிகரித்தது. இதனால் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தது.
விற்பனை:
ஆனால் சீனா திடீரென தங்கத்தை விற்க தொடங்கி உள்ளது. இதனால் தங்கம் விளையும் சரியாய் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது. அதற்கு முதல் வாரமும் 10 லட்சம் அவுன்ஸ் தங்கத்தை விற்றது.
இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கத்தின் விலை சரிந்து.. பெரிய சரிவு ஏற்பட்டது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,289.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,301 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3400 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் ரூபாய் கடந்த 2 நாட்களில் தங்கத்தின் மதிப்பில் சரிந்து உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,573 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,775 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,250 ஆகவும் உள்ளது.
இந்தியா தங்கம்
இன்னொரு பக்கம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்த தொடங்கி உள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும்.
இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35% அதிகரித்து, FY20 இல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.
உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது.
RBI ஏன் அதிக தங்கத்தை வாங்குகிறது?:
சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக உள்ளது, மேலும் தங்கம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை நம்ப முடியாது. அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.
ஏனென்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும்.இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிரம்ப் வந்த பின் பொருளாதார சரிவு நிலவும் இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தங்கம் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications