பிரேக்கிங் பாயிண்டை தொட்ட தங்கம்.. ராக்கெட் வேகத்தில் உயரபோகுது இனி.. எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க சந்தையில் தங்கம் பிரேக்கிங் பாயிண்ட் எனப்படும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு டிராய் அவுன்ஸ் அதாவது 31.1 கிராம் தங்கம் $3,000ஐ தாண்டி உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் அதாவது இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை 13%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து, தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு $3000க்கு மேல் வர்த்தகம் செய்கிறது. இது 200 டாலர் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 3200 டாலர் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Gold reaches the Breaking Point Why you should buy that at any cost now

தங்கம் விலை விடாமல் உயரும்

டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதனால் பாதுகாப்பற்ற வர்த்தக சூழல் உள்ளது. இதனால் டாலர் மதிப்பு சரிகிறது. டாலர் மதிப்பு சரிவதால்.. மற்ற நாட்டு பணத்தின் மதிப்பும் குறையும். இதனால் மார்க்கெட் சரியும். சர்வதேச மார்க்கெட் ஏற்கனவே சரிய தொடங்கிவிட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக பங்கு சந்தை மற்றும் பிட்காயின் இரண்டும் அடுத்தடுத்து சரிய தொடங்கி உள்ளது. Bitcoin (BTC) ஒரே நாளில் $80,000 க்கு கீழே சரிந்தது. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வாய் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது. 1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 90 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது.

டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக நாளுக்கு நாள் மார்க்கெட் மோசமாக சரிந்து வருகிறது. மார்க்கெட்டில் நிலையற்ற தன்மை உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்க மார்க்கெட்டில் 1.7 ட்ரில்லியன் டாலர் சரிந்து அழிந்து உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.14 கோடியே கோடி அழிந்து போய் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.

தங்கம் விலை

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார். உலகின் அளவில் கடன் $76 டிரில்லியனாக உள்ளது, மேலும் $13 டிரில்லியன் கடன் வாங்கப்பட்ட உள்ளது. கட்டணங்களும் பணவீக்கமும் பணத்தின் மதிப்பை குறைக்கும். இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். தங்கம் மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி.

தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடு. தங்கத்தில் முதலீடு செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும் . வேறு பாதுகாப்பான வழி இருக்க முடியாது. உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை.., என்று அவர் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+