தங்கத்தையே பின்னுக்கு தள்ளிய வெள்ளி விலை .. சர்னு உச்சிக்கு போய் புதிய சர்ப்ரைஸ்.. காரணம் வேற போலயே
சென்னை: தமிழகத்தில் தங்கமும் வெள்ளியும் விலை தினமும் மாற்றம் தந்து கொண்டிருக்கின்றன... ஆனால் கொஞ்ச நாட்களாகவே வெள்ளி விலையே அதிகம் பேசப்படும் மேட்டராகி விட்டது.. இன்றைய தினமும் வெள்ளியின் விலை அசரடித்துள்ளது.. அந்த அளவுக்கு வெள்ளிக்கு டிமாண்டும், மவுசும் கூடிவிட்டது.. இதற்கு சில காரணங்களை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து இங்கே பார்ப்போம்.
கடந்த டிசம்பர் 9ம் தேதி வெள்ளி கிராம் ரூ.199க்கு இருந்தது. அடுத்த நாளே அது கிராமுக்கு ரூ.207 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.8,000 உயர்வு வந்தது பெரிய அதிர்ச்சியாகும்..

விலை உயர்வுக்கு காரணங்கள்
ஆனால் இன்று அதாவது டிசம்பர் 12ம் தேதி வெள்ளியின் விலை மேலும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் ரூ.209, ஒரு கிலோ ரூ.2,09,000 என்று விற்பனை ஆகிறது...
இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணம் தொழில் துறையில் வெள்ளிக்கு ஏற்பட்ட பெரும் தேவையாகும்.. மின்சார வாகனங்கள், சூரிய சக்தி பலகைகள், விண்வெளி சாதனங்கள், செமிகண்டக்டர் போன்ற துறைகள் அனைத்தும் அதிக அளவில் வெள்ளியை பயன்படுத்துகின்றன. இந்த தேவை எதிர்காலத்திலும் மேலும் அதிகரிக்கும் என்பதால், முதலீட்டாளர்களும் வெள்ளியை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர்.
வெள்ளி விலை உச்சம்
அதேபோல நகைகள், கலை, மொபைல் மற்றும் பேட்டரி தயாரிப்பு மற்றும் சோலார் பேனல்களில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது... ஆனால் சந்தையில் தேவைக்கேற்ப போதுமான வெள்ளி இல்லை...
மறுபுறம் அமெரிக்கா விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காலங்களில், மக்கள் தங்கள் பணத்தை தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்கிறார்கள். இதன் விளைவாக, தேவை அதிகரித்து, விலையும் எகிறிவிடுகிறது.
அதுமட்டுமல்ல, பெடரல் ரிசர்வ் விரைவில் வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, மேலும் தங்கத்தை விட வெள்ளி விலை அதிகமாக ஏறி இறங்கும் தன்மை போன்ற காரணங்களும், வெள்ளி விலையை இன்னும் உச்சத்துக்கு கொண்டு போய்விடுகின்றன... .
அதற்கு மேலாக, அமெரிக்கா வெள்ளியை "முக்கிய கனிமம்" என்று அறிவித்துள்ளதாலும் வெள்ளியின் டிமாண்டு கூடிவிட்டது... மின்னணு சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு துறைகளில் வெள்ளிக்கு தேவையும் வேகமாக அதிகரித்து வருவதை மறுக்க முடியாது.
தங்கத்தை முந்தியது
சென்னை தங்க-வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி இதுகுறித்து சொல்லும்போது, "தொழில் துறையில் தேவை அதிகரிப்பதால்தான் முதலீட்டாளர்களும் வெள்ளியை தேர்வு செய்கிறார்கள். அதனால் தான் விலை ஏறிக்கொண்டே செல்கிறது" என்கிறார்..
அதேபோல ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிபுணர் ஜிகர் த்ரிவேதி சொல்லும்போது, "நீண்டகால முதலீட்டுக்கு வெள்ளி நல்ல வாய்ப்பாகவே தெரிகிறது.. திடீரென ஒரு பெரிய ஏற்றம் கூட வரலாம்.. அதேசமயம், வெள்ளி ஒரே நேரத்தில் அதிகமாக உயர்ந்ததால், 20%-30% வரை தற்காலிக சரிவு வரலாம்.. எனவே, 7-10% என்ற அளவுக்கு திருத்தம் வந்த பிறகு முதலீடு செய்வது நல்லது" என்று அறிவுறுத்துகிறார்.
உலக அளவில் எடுத்துக் கொண்டால், வெள்ளி ETF-க்களில் முதலீடு வேகமாக அதிகரிக்கிறது. ஆனால் தங்க ETF-க்களில் அதே வேகமில்லை. இதுவே, முதலீட்டாளர்கள் தற்போது வெள்ளியை அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கு முக்கியமான காரணமாகும்..
புதிய உச்சத்தில் வெள்ளியின் விலை
மொத்தத்தில், தொழில் துறையின் அதிக தேவை, முதலீட்டாளர்களின் அதிக கவனம், டாலர் மதிப்பில் ஏற்பட்ட குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இடையே சிறிய சரிவுகள் வந்தாலும், நீண்ட காலத்தில் வெள்ளி வலு காட்டும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications