நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை சமீப காலமாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. தங்கம் விலை இந்தளவுக்கு உயரும் நிலையில், அதற்கான காரணத்தை விளக்கும் ஆனந்த் சீனிவாசன், வரும் காலங்களில் அதன் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு இருக்கிறது. குறிப்பாக நேற்று மட்டும் இரண்டு முறை உயர்ந்தது. நேற்று காலை முதலில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.880 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. அதாவது ஒரு நாளில் தங்கம் விலை ரூ.1440 உயர்ந்தது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.66,400 வரை போனது.

Anand Srinivasan gold investment

உயரும் தங்கம் விலை

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.180 உயர்ந்து, ரூ.8300க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இப்படி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால் மக்கள் அதை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "அமெரிக்கப் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கிட்டதட்ட 10% வரை பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன. அதாவது அங்குப் பங்குகள் உச்சம் தொட்டு மீண்டும் குறையத் தொடங்கியுள்ளன. பணவீக்கம் அங்குச் சற்று குறைந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி எங்கு வட்டியைக் குறைக்குமோ என்றும் பலரும் நினைத்தனர். ஆனால், அமெரிக்க மத்திய வங்கி ஏற்கனவே 1% வட்டியைக் குறைத்துவிட்டனர். இப்போது அவர்கள் மீட்டிங் நடக்கும் நிலையில், அதில் வட்டி விகிதத்தை மாற்றாமல் விட்டுவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

உச்சத்தில் தங்கம்

அதேநேரம் டிரம்ப் அடிக்கும் கூத்தால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். அமெரிக்காவுக்கு ஜலதோஷம் பிடித்தால் அது உலகெங்கும் பாதிக்கும். இங்கும் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், நேற்றைய தினம் உலக வரலாற்றில் முதல்முறையாகத் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3000 டாலரை கடந்துவிட்டது. 3001- 3011 வரை இருக்கிறது. நான் இந்த மாதத்திற்குள் கடக்கும் என நினைத்தேன். ஆனால், இந்த மாதமே தங்கம் விலை 3000 டாலரை கடந்துவிட்டது.

நல்ல செய்தி

இதுபோல நற்செய்தி மேல் நற்செய்தி வந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8230 ரூபாயாக இருக்கிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் 87 ஆயிரத்தை தாண்டிவிட்து. ஜிஎஸ்டியை சேர்த்துப் பார்த்தால் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 9 ஆயிரத்தையும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8500 ரூபாயையும் தாண்டிவிட்டடது. மேக்கிங் சார்ஜ் எல்லாம் போட்டால் இன்னும் அதிகரிக்கும். அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை 0.75% குறைத்தால் இந்தாண்டே 24 கேரட் தங்கம் ஒரு கிராம் நிச்சயம் ரூ.9500ஐ கடந்துவிடும். 22 கேரட் தங்கமும் கிட்டதட்ட நெருங்கி வந்துவிடும்.

சும்மா பணம் பண்ணுவது எப்படி!

1990களில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.100- ரூ 150 தான் இருந்தது. அன்று 1000 கிராம் வாங்கி ஒன்னும் பண்ணாமல் வைத்திருந்தால். இன்று அதன் மதிப்பு கிட்டதட்ட ஒரு கோடி ரூபாயாக இருக்கும். அது கிட்டதட்ட ஒரு பிளாட் நமக்கு இலவசமாகக் கிடைத்தது போல. அவ்வளவு ஏன் 2015ல் தங்கம் விலை ரூ.2500ஆக இருந்தது. அப்போது 1000 கிராமை வாங்கி லாக்கரில் வைத்திருந்தால் இப்போது அதன் மதிப்பு ரூ.65 லட்சம். இது பெருங்குடியில் 1500 சதுரடி வீடு வாங்குவது போன்றது. ஒன்றுமே செய்யாமல் பணம் பண்ணுவது இப்படி தான்!

பணம் கொட்டும்

தங்கத்தை வைக்க லாக்கர் வாடகை மட்டும் கொடுத்துவிட்டு விட்டுவிட்டால் அது பணமாகக் கொட்டும். தங்கத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டது என நினைக்க வேண்டாம். நேற்று எத்தனை கிராம் இருந்ததோ அதே அளவு தான் இருக்கும். நாம் நோட்டுகளை அவ்வளவு அடிக்கிறோம் என்பதே அர்த்தம். நோட்டுகளை அதிகம் அடிக்கும் போது அதன் மதிப்பு குறைந்துவிடுகிறது" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+