தங்க நகை லோன்.. பிரச்சனை வந்ததும்.. ஈட்டி போல பாய்ந்த தமிழ்நாடு.. ஆர்பிஐ பின் வாங்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகை அடகிற்கு எதிராக ஆர்பிஐ கொண்டு வந்த புதிய விதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும், இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு மட்டுமே.. இதில் தீவிரமாக போராட்டங்களை மேற்கொண்ட நிலையில் ஆர்பிஐ பின்வாங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஆர்பிஐ வரைவு விதிகளுக்கு எதிராக திமுக, சிபிஎம் உள்ளிட்ட ஆளும் கட்சி தரப்பினர் போர்க்கொடி தூக்கி இருந்தனர். தி.மு.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் நேரடியாக சென்று டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சந்திப்பு நடத்தினார்.

முக்கியமாக நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குவதாகவும், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும் என்றும், அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது என்றும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைத்து, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதை குறைத்துவிடும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.

How Tamil Nadu government rebel made RBI to pause the new gold ornaments loan guidelines

அடுத்தடுத்து அம்பு போல பாய்ந்த போராட்டம்

தமிழ்நாடு முதல்வர் கடிதம்

அமைச்சர்கள் பலரின் எதிர்ப்பு

எம்பி சு வெங்கடேசன் நேரடியாக சென்று வைத்த கோரிக்கை என்று இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. தங்க நகை அடகு விதிகளில் மாற்றங்களை செய்து ஆர்பிஐ வெளியிட்டு இருக்கும் வரைவு விதிகளால் அதிகம் பாதிக்கப்பட போவது தென்னிந்திய மாநிலங்கள்தான். முக்கியமாக தமிழ்நாடுதான்.

உதாரணமாக தங்க நகையை அடகு வைத்து பணம் வாங்கும் குடும்பங்கள் தென்னிந்தியாவில்தான் அதிகம் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உள்ளன. ஏனென்றால் தமிழ்நாட்டில் தங்கம் வைத்துள்ள பெண்கள் எண்ணிக்கை அதிகம். அதனால் அவசரத்திற்கு அடகு வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.

1 தெலுங்கானா 17.5%
2 தமிழ்நாடு 13.2%
3 கேரளா 12.3%
4 கர்நாடகா 11.4%
5 ஆந்திரப் பிரதேசம் 10.9%
6 ஒடிசா 10.0%
7 குஜராத் 9.3%
8 ராஜஸ்தான் 9.2%
9 மகாராஷ்டிரா 8.3%
10 மேற்கு வங்காளம் 7.8%

இதுதான் தங்க நகையை அடகு வைத்து பணம் வாங்கும் குடும்பங்களின் சதவிகிதம் மாநில வாரியாக. இதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆர்பிஐ விதிகளால் தமிழ்நாடு இனி நேரடியாக பாதிக்கப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு இந்த சட்டத்தை மிக கடுமையாக எதிர்த்தது.

ஆர்பிஐ வரைவு விதிகள் ஏன் ஆபத்தானது?

ஆர்பிஐ வெளியிட்ட இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.

உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.

அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.

தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்ற வாங்க முடியாது என்று விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

பின்வாங்கிய ஆர்பிஐ

நகைக் கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதிய விதிகளில் மாற்றங்களை செய்யும் வரை அதை அமல்படுத்த வேண்டாம் என்றும் நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

சிறு கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதகமாக பாதிக்கப்படக்கூடாது என்றும் நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்கக் கடன்கள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டுதல்களை ஆராய்ந்தோம். ரூ.2 லட்சம் வரை கடன் பெறும் சிறு கடன் வாங்குபவர்களின் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போது இந்த விதிகளை நிறுத்தி வைப்பதே சிறந்தது. விதிகளில் மாற்றங்களை செய்த பின் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகள் செயல்படுத்தலாம்.

சரியான நேரத்தில் மற்றும் விரைவாக கடன்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இதில் மாற்றங்களை செய்ய வேண்டும். சிறு கடன் வாங்குபவர்களை இந்த முன்மொழியப்பட்ட வழிமுறைகளிலிருந்து விலக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+