Gold Rate Today: இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை.. சென்னையில் ஒரு சவரன் விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடப்பு ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. கடந்த 4ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக சென்று வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.63,400க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை உயர்வுக்கு இன்று பிரேக் விழுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட விலையில் ரேட் மாற்றம் ஏற்படவில்லை.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தங்கம் நகை மீது மக்களுக்கு தனி ஈர்ப்பு என்பது உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். தங்கத்தின் விலை என்பது சர்வதேச நிலவரத்தை பொறுத்து தினமும் மாறுபட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபகாலமாக தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை என்பது கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தங்கம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.63 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிராம் ரூ.7,150-க்கும், ஒரு பவுன் ரூ.57, 200-க்கும் விற்பனை ஆனது. ஆனால் இப்போது தினமும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரே நாளில் 2 முறை தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்றைய தினமும் தங்கத்தின் விலை என்பது அதிகரித்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 வரை உயர்ந்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ரூ.63,400 என்று விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.7930க்கு விற்பனையானது.
இதனால், தங்கம் விலை வரலாற்றில் இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று கிராமிற்கு ரூ.70 வரை உயர்ந்ததால் ஒரு கிராம் தங்கம் என்பது ரூ.8 ஆயிரத்தை தொடும் நிலை ஏற்பட்டது. இதனால் தொடர் விலையேற்றத்துக்கு நடுவே இன்றைய தினம் தங்கம் விலை குறையுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் நேற்றைய தினத்தை போல் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.63,400 என்றும்,ஒரு கிராம் தங்கம் ரூ.7930க்கு விற்பனையாகி வருகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:
06.02.2025(நேற்று)ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025 () ஒரு சவரன் ரூ. 63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ. 62,400
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,960
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
31.01.2025- ஒரு சவரன் ரூ.61,840
30.01.2025- ஒரு சவரன் ரூ.60,880
29.01.2025- ஒரு சவரன் ரூ.60,760
28.01.2025- ஒரு சவரன் ரூ.60,080
27.01.2025- ஒரு சவரன் ரூ.60,320
26.01.2025- ஒரு சவரன் ரூ.60,440












Click it and Unblock the Notifications