Gold Rate Today: நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் சட்டென உயர்ந்துள்ள தங்கம் விலை இன்றாவது குறையுமா என நகைப்பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.440 உயர்ந்து ரூ.73,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தை நிலவரப்படி, தங்கம் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு முந்தைய வாரங்களில் புது உச்சத்தை தொட்ட தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. பின்னர் மீண்டும் உயர்ந்து வருகிறது.

is-there-a-chance-that-the-price-of-gold-will-fall-today-what-is-the-rate-today

தங்கம் விலை

இடையில் ஒரு சில நாட்கள் விலை இறங்கினாலும் அது சொற்ப அளவில்தான் குறைகிறது. ஆனால் விலை ஏறும் போது விறுட்டென ஏறிவிடுகிறது. இதனால், இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். இப்படியே போனால் தங்கம் விலை 80 ஆயிரத்தை தொடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை எனவும் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக பங்கு சந்தைகளில் தடுமாற்றமும், சரிவும் காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து கடந்த மாதம் ரூ. 70 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஒரு சவரன் ரூ.74 ஆயிரம் வரை சென்ற நிலையில், பின்னர் கொஞ்சம் குறைந்தது.

ரூ.72,200க்கு விற்பனை

கடந்த 5 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ 8,775-க்கும், ஒரு சவரன் ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மாலையிலேயே கிராமுக்கு ரூ.125 அதிகரித்து ரூ.8,900க்கும், சவரனுக்கு ரூ.1,000 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து மறுநாளும் 6 ஆம் தேதி கிராமுக்கு ரூ.125 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,025க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரன் ரூ.1000 அதிகரித்து ரூ.72,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 2 நாளில் சவரனுக்கு ரூ.2000 அதிகரித்ததால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர். தொடர்ந்து அன்று மாலை மேலும் சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது. இதனால் நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் அதாவது 5 மற்றும் 6 அம் தேதி இருமுறை தங்கம் விலை அதிகரித்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

இன்றைய ரேட் என்ன?

இதன் மூலம் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9075க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று பெயரளவில் தான் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் இன்றாவது விலை குறையுமா என நகைப்பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். வெள்ளி விலையை பொறுத்த வரையில், நேற்று எந்த வித மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.9,130க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040 (இன்று)
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+