தீபாவளிக்கு முன் தங்கம் வாங்கலாமா? சூழ்நிலை சரியாக இருக்கா? வல்லுநர்கள் சொல்வது என்ன?
சென்னை: இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி வர்த்தகமானது. குறிப்பாக, டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,100 ரூபாய் உயர்ந்து 1.21 லட்சம் ரூபாயைக் கடந்தது. அகில இந்திய சரஃபா சங்கம் அளித்த தகவலின்படி, 99.9 சதவீத தூய தங்கம் 1,100 ரூபாய் அதிகரித்து, அனைத்து வரிகளும் சேர்த்து 1,21,100 ரூபாயை எட்டியது.
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம், தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடங்கியது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, செனட் அவை அங்கு தற்காலிக நிதியுதவி மசோதாவை அங்கீகரிக்கத் தவறியது. இதனால் தர்ப்பித்து அங்கு அரசு முடங்கி உள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான அரசுப் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. செப்டம்பர் மாத வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகாமல் போகலாம், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம், அறிவியல் ஆராய்ச்சிகள் நிறுத்தப்படலாம், மேலும் அமெரிக்கப் படைகளுக்கான ஊதியமும் நிறுத்தி வைக்கப்படலாம்.
அமெரிக்கா தங்கம் விலை ஏற்றம்
இந்நிலையில், தங்கத்தின் விலை மேலும் உயருமா, இப்போதே முதலீடு செய்யலாமா என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன. இந்தியாவில், தீபாவளி பண்டிகைக்கு முன் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை அதிகரிக்கும் என்பதால், விலை மேலும் உயருமா எனப் பலரும் விவாதித்து வருகின்றனர்.
பல்வேறு தங்க நகை வல்லுநர்கள் இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், பண்டிகைக் கால தேவை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற உலகளாவிய காரணிகளால் இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்
உலகளாவிய நிலைத்தன்மையின்மை தொடர்ந்தால், மேலும் விலை உயர்வு சாத்தியம். ஆனாலும், விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால், குறுகிய கால மாற்றங்களை மறுப்பதற்கில்லை. அதாவது தொடர்ந்து உயரும். ஆனால் இடையே சரியும். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், உறுதியான சேமிப்பாகவும் நீண்ட காலமாகவே பார்க்கப்படுகிறது. இது தலைமுறை தலைமுறையாக முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது. ஆனால், இதில் ஆபத்துகள் இல்லாமல் இல்லை.
தற்போதைய இந்த உயர்ந்த விலையில், தங்கம் நிச்சயமற்ற காலங்களில் ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டாலும், உடனடி வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும். தங்கம் இந்த விலை உயர்வுக்குப் பிறகு ஒரு சாத்தியமான திருத்தத்தை நாம் காணலாம். அதாவது விலை சரிவு இருக்கும். அது கொஞ்சம் பெரிய சரிவாக இருக்கும். ஆனால், இது சந்தையில் நுழைய காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பாக அமையும். 2026-ல் தங்கம் 4,000 டாலருக்கும் மேல் உயரக்கூடும்.
தங்கம் விலை உயர்வு
அந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பாக அமையும். அப்போது தங்கம் வாங்கினால் அது அடுத்த ஆண்டில் கடுமையான பலனை கொடுக்கும். இப்போது மொத்தமாகப் பெரிய முதலீடுகளைச் செய்வதற்குப் பதிலாக, தங்கப் பங்குகளுடன் இணைக்கப்பட்ட நிதி (ETFs), டிஜிட்டல் தங்கம் அல்லது முறையான கொள்முதல் மூலம் முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவது ஆபத்தைக் குறைக்க உதவும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications