அக்கா தங்கம் அடிச்சுத் தூக்குனா.. தங்கச்சி வெள்ளி தட்டித் தூக்குதே! விர்ரென விலையேற இதுதான் காரணமா?
சென்னை: ஒரு காலத்தில் உலோகச் சந்தையில் புதிய உச்சம் என்ற வார்த்தை கேட்டாலே அது தங்கத்தைத்தான் குறிக்கும். ஆனால் அந்த இடத்தை இனி வெள்ளியும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. சமீப காலமாக வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மட்டுமல்ல, புதிய உச்சங்களையும் தொட்டு வருகிறது. தங்கத்தின் நிழலில் இருந்த ஒரு உலோகமாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்ட வெள்ளி, இப்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
தங்கம் உச்ச உலோகம் என்றால், வெள்ளியும் அந்த இடத்தை பிடிக்க தயாராகி வருகிறது. ஏனெனில், வெள்ளி இப்போது ஆபரண உலோகமாக மட்டும் இல்லாமல், தொழில்துறை மற்றும் முதலீட்டு உலோகமாகவும் மாறிவிட்டது.
இதற்கிடையே, பொதுமக்கள் பார்வையிலும் ஒரு மாற்றம் தெளிவாக தெரிகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால், முழுத் தங்க நகைகள் வாங்குவது சாமானியர்களுக்கு கடினமான ஒன்றாக மாறியுள்ளது.

வெள்ளி விலை உச்சம்
அதன் மாற்றாக, வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. பல நகைக் கடைகளில் வெள்ளி நகைகளுக்கென தனி பிரிவுகள் உருவாக்கப்பட்டிருப்பதே இந்த மாற்றத்திற்கான சாட்சியாக இருக்கிறது. பொதுவாக தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விலை உயர்வுக்கு புவிசார் அரசியல் பதற்றங்கள், பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணமே காரணமாக சொல்லப்படும். ஆனால் தற்போது வெள்ளி விலை உயர்வின் பின்னணியில் இன்னொரு முக்கிய காரணம் உள்ளது. அது உலகளாவிய தொழில்துறை தேவை.
தங்கத்திற்கு மாற்றாக வெள்ளி
சோலார் மின்சாரம், மின்சார வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மருத்துவ சாதனங்கள் போன்ற துறைகளில் வெள்ளியின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலை மேலும் தீவிரமாக்கியது சீனாவின் புதிய ஏற்றுமதிக் கொள்கை. 2026 ஜனவரி முதல் வெள்ளி ஏற்றுமதிக்கு சீனா கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் அரசு உரிமம் பெற்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே வெள்ளியை ஏற்றுமதி செய்ய முடியும். சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படுகின்றனர். உலகளாவிய வெள்ளி விநியோகத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனாவின் பங்கு இருப்பதால், இந்த முடிவு சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி தேவை
இதற்கு முன்பும் பல அரிய கனிம வளங்களில் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து சீனா உலக சந்தையை கட்டுப்படுத்திய அனுபவம் உள்ளது. அதே மாதிரியான நிலைமையே இப்போது வெள்ளிக்கும் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஐந்து ஆண்டுகளாகவே உலக அளவில் வெள்ளி விநியோகத்தில் பற்றாக்குறை நிலவி வருகிறது. 2025-ம் ஆண்டு சர்வதேச அளவில் வெள்ளி தேவை 1.24 பில்லியன் அவுன்ஸாக இருந்த நிலையில், விநியோகம் 1.01 பில்லியன் அவுன்ஸாக மட்டுமே இருந்தது. இந்த இடைவெளி சீனாவின் புதிய கட்டுப்பாடுகளால் இன்னும் பெரிதாகும் என்றே சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனா வெள்ளி ஏற்றுமதி கட்டுப்பாடு
இந்த நிலையில், ஜனவரி 12-ம் தேதி வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தியாவும் இந்தப் போக்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு உலகளவில் அதிக அளவில் வெள்ளி இறக்குமதி செய்த நாடாக இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.82,800 கோடி மதிப்பிலான வெள்ளியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 44 சதவீதம் அதிகம். தற்போது ஜனவரி 14 நிலவரப்படி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,07,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி பற்றாக்குறை
வெள்ளி பற்றாக்குறைக்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. வெள்ளி பெரும்பாலும் தனியாக சுரங்கத்தில் வெட்டப்படுவதில்லை. தங்கம், ஜிங்க், காப்பர் போன்ற உலோக சுரங்கங்களில் இருந்து துணைப் பொருளாகவே கிடைக்கிறது. புதிய சுரங்கங்களை உருவாக்க குறைந்தது 10 ஆண்டுகள் வரை தேவைப்படும். அதே நேரத்தில், வெள்ளி மறுசுழற்சி செய்யப்படும் அளவும் குறைவாகவே உள்ளது. இந்தக் காரணங்களும் விநியோக அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
பங்குச் சந்தை
சென்னை தங்க வியாபாரிகள் கூறுகையில், சமீப காலமாக வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இந்தப் போக்கு வருங்காலத்திலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உலகளவில் நிலவும் போர்கள், அரசியல் பதற்றங்கள், பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள், டாலரின் மதிப்பு சரிவு, அதனுடன் சீனாவின் ஏற்றுமதிக் கொள்கை ஆகிய அனைத்தும் சேர்ந்து வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக அவர் விளக்குகிறார்.
முதலீட்டாளர்கள்
தங்கத்தைப் போலவே வெள்ளியையும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, சாமானியர்களும் கூட வெள்ளியில் முதலீடு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் வங்கிகளில் வெள்ளியை அடகுவைத்து கடன் பெற அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் உள்ளது.
முதலீட்டு உலோகம்
மொத்தமாகப் பார்த்தால், தற்போதைய சர்வதேச சூழல், தொழில்துறை தேவை, விநியோகப் பற்றாக்குறை ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து, வெள்ளியின் மதிப்பை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. தங்கத்திற்கு மாற்றாக மட்டுமல்ல, தனித்துவமான முதலீட்டு உலோகமாகவும் வெள்ளி உருவெடுத்து வருகிறது. இருப்பினும், தங்கம் அல்லது வெள்ளி என எந்த முதலீட்டையும் மேற்கொள்ளும் முன், தனிப்பட்ட நிதி நிலையை கருத்தில் கொண்டு நிபுணர்களின் ஆலோசனையுடன் முடிவு செய்வதே பாதுகாப்பான வழியாக இருக்கும்.
-
நகை கடன் தள்ளுபடி ரெடி? முக்கோணம் எடுக்கும் கோல்டு லோன் வாக்குறுதி.. ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்! -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
தங்கம் & வெள்ளி.. செதில் செதிலாக உடைந்து விழுந்த கோட்டை.. தப்பிக்க 10 வழிகள்.. வாங்கலாமா? வேண்டாமா? -
டன் டனாக கொட்டி கிடக்கும் தங்க புதையல்.. ஆனாலும் KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா! -
Gold Rate: இந்த சன்டே மட்டும் குறுக்கே வராம இருந்திருந்தா..! தங்கம் விலை இன்னும் குறைஞ்சிருக்குமே! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
Gold Rate: தங்கம் விலையில் பெரும் சரிவோ சரிவு! 1 லட்சத்திற்கு கீழ் ரேட் குறையுமா? -
Gold Rate: டிரென்ட் மாறிடுச்சி! இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications