Gold Rate Today: இன்றும் புதிய உச்சம்! ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை.. இனி கனவில் தான் வாங்க முடியும் போல!
சென்னை: தமிழ் புத்தாண்டு பிறந்த சித்திரை 1, 2 ஆம் தேதி என இரண்டு நாட்களாக தங்கம் விலை கொஞ்சம் குறைந்து மன நிம்மதியை கொடுத்தது. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இன்றாவது குறையுமா என்று நகைப்பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், தலையில் இடியை இறக்கும் விதமாக இன்றும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் வரியுத்தம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. அதுபோக டாலரின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. தினம் தினம் புதிய உச்சம் தொட்டு நகை வாங்க நினைப்பவர்களை கலங்க வைத்து வருகிறது தங்கம் விலை.

ஒரு சவரன் ரூ.70 ஆயிரம்
இந்தியாவை பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி தங்க நகைகளை அனைவரும் ஆபரணங்களாக அணிகிறார்கள். இதனால், தங்கம் வாங்குவது பொதுமக்களிடையே அதிக அளவு உள்ளது. இதனால், தங்கம் விலை உயர்வு சாதாரண மற்றும் நடுத்தர வசதி கொண்ட மக்களை நேரடியாக பாதிக்கிறது. ஒரு சவரன் ரூ. 60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ என்ற காலம் போய் எங்கு 80 ஆயிரத்தை தொட்டு விடுமோ என எண்ணும் அளவிற்கு தங்கம் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த மாதம் 9 ஆம் தேதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. 12 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அன்றைய நாளில் இதுவரை இல்லாத உச்சமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து 14 ஆம் தேதியில் இருந்து விலை சற்று குறைந்து நிம்மதி அளித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.120 குறைந்தது. அதற்கு மறுநாள் சவரனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது.
புதிய உச்சம் தொட்ட தங்கம்விலை
அதாவது நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. இந்த திடீர் விலை வீழ்ச்சி தங்க நகை வாங்குவோருக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மறுநாளே விலை ஜெட் வேகத்தில் உயரத்தொடங்கியது. குறையும் போது சவரனுக்கு 200 ரூபாய், 300 ரூபாய் என்று குறைகிறது. ஆனால் உயரும் போது மட்டும் ஒரே அடியாக 800 ரூபாய் என்ற அளவில் உயருகிறது.
நேற்றும் அப்படித்தான் சவரனுக்கு ரூ.760 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 815-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.70 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் புதிய உச்சம்
தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு இருக்க கூடிய நிலையில், இன்று விலை மேலும் அதிகரித்து முந்தைய ரெக்கார்டை முறியடிக்குமா? அல்லது விலை சரிந்து கொஞ்சம் ஆறுதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. ஆனால் இன்றும் நகை பிரியர்கள் தலையில் இடியை இறக்கும் விதமாக, மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.105 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் சென்னையில் ரூ.110 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலவரம்:
17.04.2025 (இன்று) ஒரு சவரன் ரூ. 71,360
16.04.2025 - ஒரு சவரன் ரூ. 70,520
15.04.2025 - ஒரு சவரன் ரூ. 69,760
14.04.2025 - ஒரு சவரன் ரூ. 70,040
13.04.2025 - ஒரு சவரன் ரூ. 70,160
12.04.2025 - ஒரு சவரன் ரூ. 70,160
11.04.2025 - ஒரு சவரன் ரூ. 69,960
10.04.2025 - ஒரு சவரன் ரூ. 68,480
09.04.2025 - ஒரு சவரன் ரூ. 67,260 (ஒரேநாளில் இரண்டு முறை உயர்வு)
09.04.2025 - ஒரு சவரன் ரூ. 66,300
08.04.2025 - ஒரு சவரன் ரூ. 65,800
07.04.2025 - ஒரு சவரன் ரூ. 66,280
06.04.2025 - ஒரு சவரன் ரூ. 66,480 (ஞாயிற்றுக்கிழமை)
வியாபாரிகள் சொல்வது என்ன?
தங்கம் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், வியாபாரிகள் கூறியதாவது:- அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியிருக்கிறது. தங்கத்தை பாதுகாப்பாக முதலீட்டாளர்கள் கருதுவதால் டிமாண்ட் உயர்ந்துள்ளது. இதனல, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களிலும் விலை நீடிக்கவே சான்ஸ் உள்ளது" என்றனர்.
சர்வதேச நிபுணர்கள் சிலர் கூறுகையில், சீனா -அமெரிக்கா இடையேயான வர்த்தக போருக்கு தீர்வு காணும் விதமாக ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் தொடங்கினால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது " எனவும் தெரிவித்தனர். எனினும், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் பதற்றமும் தணிந்தபாடில்லை. இதனால், தங்கத்தின் விலை வரும் நாட்களில் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவது என்பதே பெரும்பாலான சந்தை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
டெல்லி, மும்பை நிலவரம்
டெல்லியில் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,935 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.8,830 ஆக இருந்தது. கடந்த 10 நாட்களில் சராசரி விலை என்று எடுத்துக்கொண்டால் ரூ.8,661.60 வாக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.9,746 ஆகவும், நேற்று 9,632 ஆகவும் இருந்தது.
மும்பையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 8,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.8,920 ஆக விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.9,731 ஆக இன்று விற்பனையாகிறது. நேற்று ரூ.9,617 ஆக விற்பனை செய்யப்பட்டது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications