Gold rate Today: தங்கம் வாங்க பிளான் இருந்தால் உடனே போங்க.. 3வது நாளாக குறைந்த விலை! எவ்வளவு பாருங்க
சென்னை: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக தங்கம் விலை உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்துள்ளது. இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா என்று நகைப்பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்கும் ஐடியா இருக்கின்றவர்கள், இப்போதே வாங்கிவிடுவது சிறந்தது.
சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு ஆகியவற்றால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களால் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுவதும் இடையில் சில நாட்கள் குறைவதும் என நகை பிரியர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்து வருகிறது தங்கம் விலை.

ரூ.66 ஆயிரத்துக்கு கீழே சென்றது
சரி குறைகிறதே என தங்கம் வாங்க திட்டமிட்டால் மறுநாளே விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுக்கிறது என நகை பிரியர்களும் ஆதங்கப்படுகிறார்கள். இப்படி தினம் தினம் தங்கம் விலையானது போக்கு காட்டி வருகிறது. இடையிடையே குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை அதிகரித்தே வருகிறது. தங்கம் விலையில் இதுவரை இல்லாத உச்சமாக கடந்த 20 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 480-க்கும் விற்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 தினங்களாக அதன் விலை குறைந்தது. இதனால் நகை பிரியர்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்தனர். வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்தது. சவரனுக்க்கு ரூ.320- குறைந்து, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. விலை சரிவால் தங்கத்தின் விலை ஒரு சவரன் மீண்டும் ரூ.66 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 270-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை என்ன
தொடர்ந்து நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்தது. சனிக்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு பவுன் ரூ.65 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் மீண்டும் ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து இருந்தது. 21 -ஆம் தேதி கிராமுக்கு ரூ.2-, கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால், தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று விலை எப்படி இருக்கும் என்று நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் 8,230க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.15 குறைந்து 8,215 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளதால், தங்கம் வாங்கும் ஐடியா உள்ளவர்கள் இப்போதே வாங்கிவிடுவது நல்லது என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications