மொத்த இந்தியாவும் அறிய வேண்டியது.. தங்கம் விலை ஒரு லட்சத்தை கடக்க காரணமான இரண்டு விஷயங்கள்
சென்னை: தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. தங்க நகையின் வரலாறு தெரிந்த அத்தனை பேருக்குமே இந்த மாற்றம் ஆச்சரியத்தையும், நம்ப முடியாத வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி ஒருசவரன் தங்கம் 57 ஆயிரத்து 200க்கு விற்பனையானது. ஆனால் இப்போது ஒரு சவரன் தங்கம் டிசம்பர் 15ம் தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஓராண்டில் ரூ. 42,920 ரூபாய் உயர்ந்துள்ளது. இது 75 சதவீதம் அதிகரிப்பாகும்.
தங்கம் விலை கொரோனாவிற்கு பின்னர் மின்னல் வேகத்தில் உயர தொடங்கியது. 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரத்தை 4 ஆண்டுகளில் தொட்டது தங்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. அந்தவிலை உயர்வே அப்போது பலருக்கு வாயை பிளக்க வைத்தது. ஆனால் அதன்பிறகு தங்கம் விலை அடுத்தஒரு வருடத்தில் 100 சதவீதம் ஏறப்போகிறது என்று தெரியாது. அதனை தெரிந்தோ அல்லது தெரியாமலோ தங்கத்தில் முதலீடு செய்த அத்தனை பேரும் இன்று மிகப்பெரிய செல்வந்தர்கள் ஆகிவிட்டார்கள். யாரெல்லாம் தங்கத்தை வாங்கி வாங்கி சேமித்தார்களோ, அவர்கள் கணக்கில் பெரிய பணம் இப்போது இருப்பதாகவே அர்த்தம்.

தங்கம் விலை 57200
தங்கம் விலையை பொறுத்தவரை ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200 (ஒரு கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. அதன்பிறகு அப்படியே படிப்படியாக உயர தொடங்கியது. தினமும் 2000, 3000 என்று உயர தொடங்கியது. இப்படி ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது.
88 ஆயிரம் ஆக சரிந்து இருந்தது
அந்தநேரத்தில் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை உயர்ந்தது ஆனால் அதன் விலையில் இடையில் சட்டென சரிவு ஏற்பட்டது விலை படிப்படியாக குறைந்து வந்து, ஒரு பவுன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த நவம்பர் 5-ந் தேதி விற்பனை ஆனது. அதன்பிறகு தங்கம் விலை அதிரடியாக குறைந்து 88 ஆயிரம் என்கிற அளவில் கடந்த மாதம் வந்தது. ஆனால் அதன்பிறகு தங்கம் விலை குறையவே இல்லை.. பழையபடி விலை 'கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனையாகியே வந்தது.
தங்கம் விலை வரலாறு
கடந்த டிசம்பர் 12ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. டிசம்பர் 11ம் தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. டிசம்பர் 12ம் தேதி காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், பவுனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 13ம் தேதி, 14ம் தேதிகளில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே ரூ.98 ஆயிரத்து 960-க்குத்தான் விற்பனையானது.
டிசம்பர் 15 தங்கம் நிலவரம்
ஆனால் டிசம்பர் 15ம் தேதியான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர தொடங்கியது. தங்கம் விலை இன்று காலையில் 99 ஆயிரத்தை கடந்தது. மாலையிலும் விலை உயர்ந்தது. இன்று ஒட்டுமொத்தமாக கிராமுக்கு 145 உயர்ந்து ஒரு கிராம் 12,515க்கு விற்பனையானது. ஒரு சவரன் டிசம்பர் 15ம் தேதி மாலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இல்லதரசிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
வட்டி விகிதம்
தங்கம் விலை அதிரடி உயர்வுக்கு, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைந்தால் முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் திருப்புவது வழக்கம்.
தங்கம் விலை அதிகரிக்க 2 காரணங்கள்
அப்படியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் விலை உயர்ந்து இருந்தது. அமெரிக்கா ஒரு காரணம் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்ததும் காரணம் ஆகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது வர்த்தத்தின் போது இன்று 9 காசுகள் காலையில் சரிந்தது. ஒரு லடார் 90.58 ரூபாய் ஆக உள்ளது. இந்த இரண்டு தான் தங்கம் விலை கடுமையாக அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை உச்சம்
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து உச்சம் கண்டு வருகிறது. கடந்த டிசம்பர் 11ம் தேதி ஒரு கிராம் ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனையாகி இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12ம் தேதியும் விலை உயர்ந்து காணப்பட்டது.
வெள்ளி விலை அதிகரிப்பு
டிசம்பர் 12ம் தேதி மட்டும் கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.216-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் 13ம் தேதி கிராமிற்கு 6ரூபாய் குறைந்து 210,000 ஆக விற்பனையானது. டிசம்பர் 14ம் தேதி ஞாயிறு அன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 15ம் தேதியான இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 215 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ 215,000 ஆகவும் விற்பனையாகிறது.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு!












Click it and Unblock the Notifications