தங்கம் விலை உயர்வு.. திருமணத்திற்கு நகை வாங்க போறீங்களா? நகை கடைகள் எடுத்த முக்கிய முடிவு!
சென்னை: நாடு முழுக்க நகை கடைகள் தங்கம் விலை உயர்விற்கு இடையே மக்கள் தங்கம் வாங்க வசதியாக பல முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளார்களாம். தங்கம் விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை. நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 9,005க்கு விற்பனை ஆகிறது.
வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் நாடு முழுக்க நகை கடைகள் தங்கம் விலை உயர்விற்கு இடையே மக்கள் தங்கம் வாங்க வசதியாக பல முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளார்களாம். தங்கம் விலை உயர உயர மக்கள் அதை வாங்கிக்கொண்டே இருக்க முடியாது.
பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும். இதனால் விற்பனை குறையும். இதை தடுக்க மிடில் கிளாஸ் மக்களும் தங்கம் வாங்கும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

தங்க திட்டங்கள் என்ன
1. இதனால் புதிய தங்க சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்ய நகை கடைகள் ஆலோசனை செய்து வருகிறதாம்.
2. தங்க நகைகளில் உற்பத்தி செலவை மொத்தமாக அதாவது செய்கூலியை மொத்தமாக நீக்க.. மறைமுகமாக கூட இல்லாத வகையில் நீக்க ஆலோசனை செய்து வருகிறார்களாம்.
3. திருமணத்திற்கு நகை வாங்குவது போல.. மொத்தமாக நகை வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் தரப்படும் என்றும் அறிவிக்க உள்ளார்களாம்.
4. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கம் தொடங்கி பெரிய தங்கம் வரை அனைத்தின் மதிப்பும் வேகமாக உயரும். இதனால் குறைந்த கிராம் அளவில் புதிய டிசைன்களை கொண்டு வர உள்ளார்களாம். இதனால் மிடில் கிளாஸ் அதிக அளவில் தங்கம் வாங்க முடியும்.
5. அதேபோல் 18 கேரட் தங்கம் விலை குறைவாக இருக்கும். அதனால் அதன் விற்பனையை ஊக்குவிக்க உள்ளார்களாம். இதனால் மிடில் கிளாஸ் அதிக அளவில் தங்கம் வாங்க முடியும்.
6. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 30% அதிகரித்து உள்ளது. இந்த அளவிற்கு ரிட்டர்ன் கொடுக்க கூடிய முதலீடு எதுவும் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும். இதை குறிப்பிட்டு தங்கத்தில் பல சலுகைகளை கொடுக்க நிறுவனங்கள் விரும்புகிறதாம்.
7. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் பலரும் தங்கத்தை எக்சேஞ்ச் செய்ய தொடங்கி உள்ளனர். அதாவது தங்களிடம் உள்ள பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கம் வாங்க தொடங்கி உள்ளனர். உலக தங்க கவுன்சிலின் (WGC) கூற்றுப்படி, இப்போது மொத்த நகை வாங்குதலில் 40-45% பரிவர்த்தனைகள் இந்த எக்சேஞ்ச் வகை பரிவர்த்தனைகள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது . இதையும் ஊக்குவிக்க நகை கடைகள் ஆலோசனை செய்து வருகிறதாம்.
காரட் தங்கம்
காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.
24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.
வருகிறது புதிய தங்கம்
தங்கத்தின் விலை 2024ல் 25% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2024ல் தங்கத்தின் விலை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். அதேபோல் இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2கே கிட்ஸ் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால்.. அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. இதையடுத்தே 9 கேரட் தங்கத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தங்க நகை வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் உட்பட அனைத்து முக்கிய அமைப்புகளுடன் நடந்த இறுதிச் சுற்று ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு சில மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இனி தங்கம் வாங்கும் போது 9 KT தங்கப் பொருட்களுக்கு உடனடி தூய்மைச் சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் 2024 இல் 22 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹68,000 ஆகவும், 9 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹25,000 முதல் ₹30,000 ஆகவும் இருந்தது. ஒப்பீட்டளவில் 9 கேரட் விலை குறைவாக இருக்கும்.












Click it and Unblock the Notifications