நகைக் கடைக்காரர்கள் எங்கிருந்து தங்கம் வாங்குகிறார்கள்? நாமும் இங்கு கோல்டு வாங்க முடியுமா?
சென்னை: நகைக் கடைக்காரர்கள் எங்கிருந்து தங்கத்தை வாங்குகிறார்கள் என்பது தெரியுமா? ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 74,840-க்கு விற்பனையாகி வருகிறது. அதாவது ரூ 75 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
மண்ணின் மீதும் பொன்னின் மீதும் போட்ட காசு என்றும் வீணாகாது என்பார்கள். அதற்காகத்தான் மக்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேமிப்பாக்குகிறார்கள். அதிலும் தங்கத்திலோ அல்லது காலி மனை அல்லது வீட்டிலோ முதலீடு செய்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. 2006ஆம் ஆண்டு ஒரு சவரன் ரூ 10 ஆயிரத்திற்குள் இருந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து 74 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ 9,355க்கும் ஒரு சவரன் ரூ. 74,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒரு குண்டு மணி தங்கத்தை கூட நடுத்தர மக்களால் வாங்க முடியாத நிலையில் அவர்கள் 22 கேரட்டுக்கு பதிலாக 18 கேரட், அல்லது 9 கேரட்டிற்கு செல்லலாமா என யோசனை செய்கிறார்கள்.
அது போல் தங்கத்திற்கு பதில் கவரிங் நகைகளை பயன்படுத்துவதையும் சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் நகைக் கடைக்காரர்கள் எங்கு சென்று தங்கம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள ஜாவேரி பஜார் என்ற இடத்தில்தான் நகைச் சந்தை இருக்கிறது. நம்ம சென்னை ரிட்சி ஸ்ட்ரீட் போல் குறுகலான சந்தில் 100-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளில் ரத்தினங்கள், நகைகள் விற்கப்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்பலால் ஜாவேரி எனும் நகை வியாபாரியின் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அது போல் திரிபோவந்தஸ் ஜாவேரி என்பவரால் 1864 ஆம் ஆண்டு இந்த சந்தை உருவாக்கப்பட்டது என்கிறார்கள். இதில் எது உண்மை என தெரியவில்லை.
ஜாவேரி பஜார் முழுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஜாவேரி பஜாரும் ஒன்று. இங்கிருந்துதான் நகைக் கடைக்காரர்கள் நகைகளை வாங்கி வந்து விற்கிறார்கள். இந்த ஜாவேரி பஜார் 160 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
எனினும் இந்தியாவின் தங்க தலைநகரமாக கேரள மாநிலம் திருச்சூர்தான் தொடர்ந்து நீடித்து வருகிறது. இங்கு நகைத் தொழில் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. Whole sale கடை என்பதால் இங்கெல்லாம் தங்கம் விலை குறைவாக இருக்குமா என தெரியவில்லை. அது போல் இங்கு தனிப்பட்ட நபர்களுக்கு தங்கம் விலைக்கு கொடுப்பார்களா என்பதும் தெரியவில்லை.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications