டிரம்ப்பால் 4 நிமிடத்தில் பஸ்பம் ஆன ரூ.11 கோடியே கோடி.. ஒரே பாதுகாப்பு தங்கம்தான்.. உடனே வாங்குங்க
சென்னை: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள வரிகள் காரணமாக உலக அளவில் மார்க்கெட்கள் சரிய தொடங்கி உள்ளன. நேற்று இரவே இந்திய நேரப்படி 3 மணி அளவில் அமெரிக்காவின் பிரபல S&P 500 ஃப்யூச்சர்ஸ் கடுமையான சரிவை சந்தித்தது. வெறும் நான்கு நிமிடங்களில் 3% சரிந்தது. இதனால் சந்தை மூலதனத்தில் $1.3 டிரில்லியன் அழிக்கப்பட்டது.
அதாவது இந்திய மதிப்பில் 11,14,89,79,53,00,000 ரூபாய் 4 நிமிடத்தில் அழிந்து உள்ளது. அதாவது 11 கோடியே கோடி ரூபாய் அழிந்துள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த விரைவான சரிவு கிரிப்டோகரன்சி சந்தையில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தியது, Bitcoin (BTC) $68,000 இலிருந்து $64,500 ஆக குறைந்தது. தோராயமாக 5.15% குறைந்துள்ளது Ethereum (ETH) ஆனது $3,200 இலிருந்து $3,040 ஆகவும், 5% வீழ்ச்சியைக் கண்டது.
கிரிப்டோ மார்க்கெட் சரிவு
மொத்த கிரிப்டோ மார்க்கெட் கேப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிப்டோ சந்தைக் குறியீடு, $2.5 டிரில்லியனில் இருந்து $2.38 டிரில்லியனாக 4.8% சரிந்தது.. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வாய்ப்பு சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.

1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 70 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின். இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
இந்திய மார்க்கெட் சரிவு
வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியாலம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. 81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
ஒரே பாதுகாப்பான விஷயம் தங்கம்
இந்த நிலையில் ஒரே பாதுகாப்பான விஷயமாக தங்கம் மாறி உள்ளது. அதாவது தங்கத்தில் முதலீடு செய்வதே இப்போதைக்கு பாதுகாப்பு. பணத்தில் போட்டால் பணம் மதிப்பு குறையும். கிரிப்டோகரன்சி வாங்கினால் அதன் மதிப்பும் குறையும். மார்க்கெட்டில் போட்டால் அதன் மதிப்பும் சரியும். இப்படி இதில் முதலீடு செய்தால் அது கடுமையாக பாதிக்கப்படும். சில்லறை வர்த்தகத்தில், 24K தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.92,840 ஆகவும், 22K விலை ரூ.85,100 ஆகவும், மற்றும் 18K தங்கத்தின் 10 கிராம் ரூ.69,630 ஆகவும் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. உதாரணமாக, 24K தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் 10 கிராமுக்கு ரூ.90,890 ஆகவும், கனடாவில் 10 கிராமுக்கு ரூ.85,910 ஆகவும், இங்கிலாந்தில் 10 கிராமுக்கு ரூ.86,570 ஆகவும், அமெரிக்காவில் 10 கிராமுக்கு ரூ.85,890 ஆகவும் உள்ளது.
எனவே இப்போதைக்கு ஒரே safe heaven.. அதாவது உங்களை பாதுகாக்க போகும் சொர்க்கம் தங்கம் மட்டும்தான். 10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,284 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,510 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,020 ஆகவும் உள்ளது.
வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார். அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications