தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு.. உடனே தங்கம், வெள்ளியை வாங்கி போடுங்க.. எக்ஸ்பர்ட் கணிப்பு
சென்னை: உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று ப்ரோக்கர் நிறுவனமான மோடிலால் ஆஸ்வேர்ல்ட் நிறுவனம் கணித்து உள்ளது. வெள்ளியின் விலை அமெரிக்காவில் கிலோவிற்கு 1 லட்சம் ரூபாய் விற்கிறது. தங்கத்தின் விலை அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் விலை 2,60,164 ஆக உயர்ந்து உள்ளது. உலக வரலாற்றில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை இவ்வளவு அதிகம் உயர்வது இதுவே முதல்முறை.
1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை பவுன் ஆகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கட்டணக் கொள்கைகளால் பொருளாதார நிலையின்மை உண்டாகி உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக $3,000 (ரூ. 2.6 லட்சம்) மதிப்பைத் தாண்டி அங்கே விற்பனை ஆகிறது.
மோடிலால் கணிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று ப்ரோக்கர் நிறுவனமான மோடிலால் ஆஸ்வேர்ல்ட் நிறுவனம் கணித்து உள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வரும் நாட்களில் டாலர் மட்டுமன்றி ரூபாயின் மதிப்பும் குறையும். இதனால் மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி செல்வார்கள். இதனால் அதை தேவை அதிகம் இருக்கும். அந்த தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும். எனவே தங்கம்தான் சிறந்த ஆப்ஷன்.. அதன் மதிப்பு வரும் நாட்களில் வெடிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதனால் பாதுகாப்பற்ற வர்த்தக சூழல் உள்ளது. இதனால் டாலர் மதிப்பு சரிகிறது. டாலர் மதிப்பு சரிவதால்.. மற்ற நாட்டு பணத்தின் மதிப்பும் குறையும். இதனால் மார்க்கெட் சரியும். சர்வதேச மார்க்கெட் ஏற்கனவே சரிய தொடங்கிவிட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக பங்கு சந்தை மற்றும் பிட்காயின் இரண்டும் அடுத்தடுத்து சரிய தொடங்கி உள்ளது. வர்த்தக போர் காரணமாக நாளுக்கு நாள் மார்க்கெட் மோசமாக சரிந்து வருகிறது. மார்க்கெட்டில் நிலையற்ற தன்மை உள்ளது. இதனால் தங்கம் மட்டுமே பாதுகாப்பு.
தொடர்ந்து உயரும் விலை
Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் தாண்டி தங்கம் விலையிலும் பாதிப்பு ஏற்படும். இந்தியா மீதான கட்டுப்பாடுகள் காரணமாக தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் தீவிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் விலை தீவிரமாக உயரப் போகிறது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினாள் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
-
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications