ரூ.1 லட்சத்தை தொடுமா? அல்லது 40% சரியுமா? தங்க நகை வாங்க போறவங்க முதலில் இதை படிங்க!
சென்னை: தங்க நகை 1 லட்சத்தை தொடும் என்று ஒரு பக்கம் சிலர் வாதம் வைத்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்கத்தின் விலை 40% சரியும் என்று வாதம் வைத்து வருகின்றனர். இது தொடர்பாக உலக பொருளாதார வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,540 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,745 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,245 ஆகவும் உள்ளது. 10 கிராம் தங்கம் 95,400 ஆகும். இது 1 லட்சத்தை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தங்கம் விலை குறையும்
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டாரின் பொருளாதார நிபுணர் ஜான் மில்ஸ், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1,820 ஆகக் குறையும் என்று கணித்துள்ளார், இது அவுன்ஸ் ஒன்றுக்கு $3,080 என்ற தற்போதைய நிலையில் இருந்து குறிப்பிடத்தக்க குறைவு. இது கிட்டத்தட்ட 38-40% சரிவைக் குறிக்கும், இது தங்கச் சந்தையை கணிசமாக பாதிக்கும். இப்போது தங்கம் விலை ஏறினாலும் இனி ஏறுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் இனி குறையவே தொடங்கும் என்று கூறி உள்ளார்.
1 லட்சத்தை அடையும்
இந்த ஆண்டு அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் இரண்டு வட்டி விகிதக் குறைப்புகளை மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் நிலையில், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது 0 கிராம் தங்கம் 95,400 ரூபாய் என்பதால் இது 1 லட்சம் ரூபாயை அடைய வாய்ப்பு இருப்பதாக காமா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் கொலின் ஷா தெரிவித்தார்.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கமாடிட்டிஸ் மற்றும் தலைவரான கிஷோர் நார்னே, தங்கத்தின் விலை உயர்விற்கு "உச்சவரம்பு இல்லை". தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000-4,500 வரை எளிதாக உயரும். நீங்கள் எந்த டார்கெட் அமைத்தாலும், அது இறுதியில் அடையும். 1 லட்சத்தை இந்த வருடம் அடையவில்லை என்றாலும் அடுத்த வருடம் அடையும்.
தங்கம்தான் பாதுகாப்பு
சிலர் விலை இருக்கிறது என்கிறார்கள். சிலர் விலை குறைகிறது என்கிறார்கள். இதனால் உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். ஆனால் மற்ற முதலீடுகளை ஒப்பிடுகையில் தங்கம் இப்போதும் பாதுகாப்பான் முதலீடு ஆகும்.
தங்கத்தில் முதலீடு செய்வதே இப்போதைக்கு பாதுகாப்பு. பணத்தில் போட்டால் பணம் மதிப்பு குறையும். கிரிப்டோகரன்சி வாங்கினால் அதன் மதிப்பும் குறையும். மார்க்கெட்டில் போட்டால் அதன் மதிப்பும் சரியும். இப்படி இதில் முதலீடு செய்தால் அது கடுமையாக பாதிக்கப்படும். சில்லறை வர்த்தகத்தில், 24K தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.92,840 ஆகவும், 22K விலை ரூ.85,100 ஆகவும், மற்றும் 18K தங்கத்தின் 10 கிராம் ரூ.69,630 ஆகவும் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. உதாரணமாக, 24K தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் 10 கிராமுக்கு ரூ.90,890 ஆகவும், கனடாவில் 10 கிராமுக்கு ரூ.85,910 ஆகவும், இங்கிலாந்தில் 10 கிராமுக்கு ரூ.86,570 ஆகவும், அமெரிக்காவில் 10 கிராமுக்கு ரூ.85,890 ஆகவும் உள்ளது.
எனவே இப்போதைக்கு ஒரே safe heaven.. அதாவது உங்களை பாதுகாக்க போகும் சொர்க்கம் தங்கம் மட்டும்தான். 10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,284 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,510 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,020 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications