லஸ்ஸி விட்றாதீங்க.. சத்தான லஸ்ஸியை குடித்தால் "அந்த" குறையும் நீங்கும்! என்னாது பட்டை, ஏலக்காய்? பலே
சென்னை: கோடை காலங்களில் பொதுமக்களிடம் பெரும் "கிராக்கி" லஸ்ஸிக்கு உண்டு.. ஆனால், அனைத்து காலங்களிலுமே லஸ்ஸி உடலுக்கு பெருத்த பலனை தந்து வருகிறது.
எப்போதுமே ஆயுர்வேதத்தில் லஸ்ஸிக்கு முக்கியத்துவமான இடம் உண்டு.. இதற்கு காரணம், லஸ்ஸியில் கால்சியம், வைட்டமின் B12, துத்தநாகம், புரோட்டீன் போன்ற உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசிய சத்துகளும் இதில் நிறைந்திருக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி: எப்போதுமே பால் பொருட்களில் கால்சியம் அதிகமாக இருப்பதுடன், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்பவை.. எனவே, லஸ்ஸி குடிப்பது, பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவை கொடுக்கின்றன. இதனால், எலும்பு தேய்மானம் வருவதும் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.
லஸ்ஸியிலுள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரிக்கசெய்து, செரிமானத்துக்கு பேருதவி புரிகிறது. இதனால் ஜீரண சக்தியும் அதிகரிக்கிறது. வயிறு உப்புசம் போன்ற வயிறு உபாதைகள் இருந்தாலோ அல்லது வயிற்றுப் புண்கள் இருந்தாலோ, அதற்கு இந்த லஸ்ஸியே போதுமானது..
சிறப்புகள்: லஸ்ஸியில் உள்ள மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், அதிலுள்ள வைட்டமின் B12 சத்துக்கள்தான்.. இது ரத்தத்திலுள்ள குளுக்கோஸை ஆற்றலாக மாற்றக்கூடியது.. அதனால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தாலே இந்த ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடுமாம்.. எனவே, வைட்டமின் B12 பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கு லஸ்ஸி ஒரு சிறந்த மருந்தாகும்.
இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், உடலுறவில் நாட்டம் இல்லாதவர்களுக்கும், நாட்டம் ஏற்படுத்தக்கூடிய சக்தி இந்த லஸ்ஸிக்கு இருக்கிறதாம்.. அதேபோல, ஆண்மைக்குறைவையும் லஸ்ஸி போக்குகின்றன.
ஸ்பெஷல் டிரிங்க்ஸ்: இதற்கு ஸ்பெஷலாகவே லஸ்ஸி தயாரிப்பார்கள்.. அதாவது, புளிப்பில்லாத தயிரில் கற்கண்டு சேர்த்து, அதை துணியால் வடிகட்டி கொள்ள வேண்டும். இதில், சிறிது பால், ஏலக்காய், மிளகு, கிராம்பு போன்றவற்றையும் கலந்து குடிக்கும்போது, உடலிலுள்ள பலவீனம் நீங்கி, உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும் என்கிறார்கள்.
அதேபோல லஸ்ஸியில் புரோட்டீன் அதிகமாக உள்ளதால், தசைகளை வலிமையாக்கும்.. எனவே, உடல் பலவீனமானவர்களும் லஸ்ஸியை குடிக்கலாம்.. தினமும் தயிர் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துவதால், தயிருடன் சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாக சாப்பிடலாம் என்கிறார்கள்.. ஆனால், சர்க்கரை நோயாளிகள் மட்டும், சர்க்கரை போட்ட லஸ்ஸியை தொடவே கூடாதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications