Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டு ஈரல் ஈர்க்குதா.. மட்டன் லிவரில் இவ்வளவு சத்துக்களா? கேன்சரை கூட விரட்டுதே.. ஆரோக்கிய கல்லீரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பிணி பெண்களும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், ஆட்டு ஈரலை உணவில் அடிக்கடி சேர்த்து வருவது நல்லது என்கிறார்கள் உணவு நிபுணர்கள் இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆட்டு ஈரலில் உள்ள சத்துக்கள், கலோரிகள், நன்மைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஆட்டு கல்லீரலில் வைட்டமின் A, B, B12, பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதாவது, வெறும் 100 கிராம் ஆட்டு கல்லீரலில், வைட்டமின் A, 121.20 மில்லி கிராம், வைட்டமின் B 2 0.33 மி.கி, வைட்டமின் B6 0.70 மி.கி, வைட்டமின் B9 163.01கி, வைட்டமின் C13.60 மி.கி, கரோட்டினாய்டுகள் 1017.69கி, வைட்டமின் D 20.71 மி.கி, வைட்டமின் D3 0.43கி, வைட்டமின் D3(செயலில்) 0.14 மி.கி போன்றவை நிறைந்துள்ளன.

mutton liver goat liver cancer

சத்துக்கள்: அதே 100 கிராம் ஆட்டு கல்லீரலில் , 217.95 கிலோ, புரதம் 16.97 கிராம், கொழுப்பு 13.77 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1.42 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் 6.17 கிராம், ஃபைபர் 1.96 கிராம், சோடியம் 51.08 மிகி, பொட்டாசியம் 390.21 மி.கி, கால்சியம் 38.54 மி.கி, இரும்பு 5.83 மி.கி, துத்தநாகம் 3.05 மி.கி போன்றவை அடங்கியிருக்கின்றன.

இவ்வளவு இருந்தும், கலோரிகள் மிகவும் குறைவாகும்.. கார்போஹைட்ரேட் 100 கிராமுக்கு 1.8 கிராமும், நிறைய கொழுப்புச்சத்தும் உள்ளன.. அதேசமயம், சிக்கன், மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது..

ஆட்டு கல்லீரல்: ஆட்டு கல்லீரல் பெண்களுக்கு மிகவும் நல்லது.. மெனோபாஸ் எட்டிவிட்ட பெண்கள் ஆட்டு கல்லீரலை சாப்பிடுவதால், உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும்.. இரும்புச் சத்து குறைபாட்டை நீக்கி, ஹீமோகுளோபின் அளவை பெருக்க ஆட்டு ஈரல் உதவுகின்றன. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை சாப்பிட்டு வரலாம்.

அதுமட்டுமல்ல, போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடியது, புதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதால் ரத்தசோகையை குணப்படுத்துகிறது. கல்லீரலிலுள்ள கால்சியம் சத்துக்கள், நம்முடைய எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது..

உடல் பலமிழந்து உள்ளவர்கள், ரத்தசோகையால் அவதிப்படுபவர்களுக்கு கல்லீரல் சிறந்த மருந்தாகும்.. ஆனால், இதில், கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், நிறைய பூண்டு சேர்த்து சமைக்க வேண்டும்.

ஆரோக்கியம்: நமக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும் உண்டாகக் கூடிய அமினோ அமிலம் இந்த ஆட்டு கல்லீரலில் உள்ளது.. தசை நிறை பராமரிப்பு, திசு சரிசெய்தல், ஹார்மோன் உற்பத்தி, தோல், தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரிகிறது ஆட்டு கல்லீரல்.. அதேபோல, கல்லீரலில் உள்ள வைட்டமின் B சத்துக்கள், மன அழுத்தத்தை போக்கக்கூடியதாகவும், சோர்வை குறைத்து, மனநிலையை மேம்படுத்தவும் தூண்டுகோலாகிறது..

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், ஆட்டு கல்லீரலை 419 கிராம் அளவு மட்டுமே உணவில் எடுத்து கொள்ள வேண்டுமாம். அத்துடன் சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும்.

கர்ப்பிணி பெண்கள்: இந்த ஈரலிலுள்ள வைட்டமின் A சத்தானது, நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.. கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலை சமைத்து சாப்பிட்டுவந்தால் கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பார்கள். அதேசமயம், இந்த கல்லீரலில் வைட்டமின் A உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் சாப்பிடக்கூடாது.

அதுமட்டுமல்ல, ஆரோக்கியமான மோனோ- மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆட்டு கல்லீரலில் இருந்தாலும், ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகளும், நிறைவுற்ற கொழுப்புகளும் இதில் உள்ளதை மறந்துவிடக்கூடாது. இந்த நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள்தான், இதய நோயுடன் நேரடியாக தொடர்புடையவை. எனவே, இதய நோய் இருப்பவர்கள், பக்கவாதம், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கல்லீரல் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அல்லது டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது..

முழுமையான சத்து: அதேபோல கல்லீரலை பதப்படுத்தி சாப்பிட்டால், அதிலுள்ள சத்துக்கள் வீணாகிவிடும். அதிக எண்ணெய் சேர்த்து வறுத்தும் சாப்பிடக்கூடாது.. சிறிது உப்பு , மஞ்சள், பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே முழுமையான சத்துக்களை பெறலாம்.. அதாவது, குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் என்றால் அது இந்த, ஆட்டு ஈரல் மட்டும்தான்....!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+