முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? நீங்க உருளைக்கிழங்கும் வெக்குறீங்களா? அப்ப இதை படிங்க.. - ஜாக்கிரதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபிரிட்ஜில் சில பொருட்களை தான் பயன்படுத்த வேண்டுமாம்.. சில உணவுப்பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. அதில் கோழிமுட்டையும் ஒன்று. என்ன காரணம்?

எப்போதுமே தேங்காய், மாங்காய்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள். தேங்காயை துருவிக்கொண்டு, காற்று புகாத டப்பாவில் ப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் துண்டுகளை பிரிட்ஜில் வைக்கலாம். பழுக்காத பச்சை மாம்பழங்கள் இருந்தாலும், பிரிட்ஜில் வைக்க வேண்டாம்.. மாம்பழங்கள் பழுக்காமல் போய், ருசியும் குறைந்துவிடும்.

Amazing Health Benefits of preserve potatoes and Do you know Refrigerating eggs can increase the risk of cancer


பழங்கள்:
தர்பூசணிஅதேபோல, தர்பூசணியை, வெட்டாமல் பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வெட்டாமல் வைத்தால், சுவை, நிறம் மாறிவிடும்.. தர்பூசணி பழத்தை எப்போதுமே பிரிட்ஜில் வைத்திருந்தால், அதன் உள்ளே பாக்டீரியா வளர்ச்சி பெற்றுவிடுமாம்.

இதுபோலவே, வெங்காயம், பூண்டு, தேன், அவகேடோ, தக்காளி, பிரட் போன்ற பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து கொள்ள கூடாது. இவற்றையெல்லாம் வெளியில் வைத்தே நாம் பயன்படுத்த வேண்டும்.

முட்டைகள்:
இந்நிலையில், முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. முட்டைகளையும் ஃப்ரிட்டிஜில் வைக்கக்கூடாதாம்.. சாதாரணமாக அறையின் வெப்பநிலையில் வைக்கும் முட்டைகளைவிட, விட, ப்ரிட்ஜில் வைத்திருக்கும் முட்டைகள் சீக்கிரத்தில் கெட்டு விடுமாம்..

அதாவது, முட்டையிலுள்ள கருவானது, பால் போல திரிந்துவிடும். அதேபோல, முட்டையின் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.

ஒருவேளை, நாம் கடையில் வாங்கிவரும் முட்டையில், சால்மோனெல்லா என்ற பாக்டீரியா இருக்கலாம். இது தெரியாமல் நாம் முட்டையை ப்ரிட்ஜில் வைக்க நேரிந்தால், மற்ற முட்டைகளிலும் இந்த பாக்டீரியா பரவிவிடும். எந்த முட்டையில் பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை நம்மாலும் கண்டுபிடிக்க முடியாது.. அதனால், முட்டைகளை எப்போதுமே ஃபிரிட்டிஜில் வைக்காமல் கிச்சனில் வைத்திருந்தாலே போதும்.

முட்டை ஓடுகள்: எப்போதுமே முட்டைகளில் பாக்டீரியா தொற்றுக்கள் சீக்கிரமாக பற்றிக்கொண்டுவிடும்... இந்த பாக்டீரியாக்கள் முட்டைகளின் ஓடுகளில் உருவாகுபவை.. வேண்டுமானால், முட்டைகளை சுத்தம் செய்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால், நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடாது.. அதேசமயம், நீண்ட நேரம் வெளியில் வைத்திருக்கவும் கூடாது... நல்ல சுத்தமான முட்டையை பிரிட்ஜில் வைக்கலாமே தவிர, உடைந்த முட்டைகளை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டுமாம்.

உருளைக்கிழங்கையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள்.. காரணம், இந்த கிழங்கிலிருக்கும் ஸ்டார்ச், சர்க்கரையாக மாறி விடும்... இதை சமைக்கும்போது, அமினோ அமிலமாக மாறிவிடக்கூடும்.. Acrylamide என்ற வேதி பொருளை உருவாக்கக்கூடியது. அதாவது, புற்றுநோய் வரை கொண்டுபோய்விடும் அளவுக்கு ஆபத்து நிறைந்ததாம் இந்த வேதிப்பொருள்.

சிகரெட்: இந்த வேதிப்பொருளை பயன்படுத்திதான், பேப்பர், பிளாஸ்டிக்ஸ் போன்றவற்றை தயாரிப்பார்கள்.. சிகரெட் பிடிப்பதால் ஏற்பட கூடிய வேதிப்பொருளில் இந்த Acrylamide நிறையவே இருக்குமாம். எனவே நீண்ட நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், சிறுநீரகம், கர்ப்பப்பை, குடல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+