சிறுகுறிஞ்சா.. தொங்கும் ஊளைச்சதையை குறைக்கும்.. நீரிழிவு நோயாளி சிறுகுறிஞ்சான் இலை சாப்பிடலாமா? செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுகுறிஞ்சான் மூலிகை பற்றி தெரியுமா? இந்த மூலிகையை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? எப்படி பயன்படுத்துவது?

சர்க்கரை நோயாளிகளின் அருமருந்தாக இந்த சிறு குறிஞ்சான் இலைகளை சொல்லலாம். காரணம், இந்த மூலிகையின் இலைகளில் பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம் போன்றவை அடங்கியிருக்கின்றன.

sirukurinjan root sirukurinjan leaf sugar patients

அதேபோல, இதிலுள்ள ஜிம்னிமிக் அமிலம்தான், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பேருவி புரிவதாக நிறைய ஆய்வுகள் தெரியப்படுத்தியிருக்கின்றன. அதுமட்டுமல்ல, சர்க்கரை, கொழுப்பை உறிஞ்சுவதை இந்த மூலிகை எளிதாக தடுத்து நிறுத்துகிறது.. எனவே, சர்க்கரை நோயாளிகள் சாதாரணமாகவே இந்த இலைகளை அப்படியே மென்று விழுங்கலாம்.

மருந்துகள்: இந்த இலைகளை எப்படி பயன்படுத்தினாலும், பயன்கள் நிறைய கிடைக்கும்.. இலைகளில் டீ தயாரித்து குடிக்கலாம். கடைகளில் மாத்திரை வடிவத்திலும் கிடைக்கிறது. இந்த இலை பவுடர்களாகவும் கடைகளில் கிடைக்கிறது. ஆனால், உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த சிறுகுறிஞ்சானை 3 முதல் 5 கிராம் வரை சாப்பிட வேண்டும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல, இன்சுலின் எடுத்துக் கொள்ளும்போதும், இந்த சிறுகுறிஞ்சானை சாப்பிடலாம். இதன்மூலமும் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைக்க முடியும்.. இப்படி பல்வேறு நன்மைகளை இந்த மூலிகை தந்தாலும், டாக்டரின் முறையான ஆலோசனை இல்லாமல், சிறுகுறிஞ்சானை உட்கொள்ளவே கூடாது.

புற்றுநோய்: பிளவனாய்டுகள் இந்த இலையில் உள்ளதால், புற்றுநோய் செல்கள் நம்மை நெருங்குவதை தடுக்கிறது. முறையான மாதவிடாய் ஏற்படாவிட்டால், ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலையுடன், களா இலைகளையும் 2 கைப்பிடி அளவு சேர்த்து அரைத்து, தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது மாதவிடாய் குறைபாடுகள் நீங்கும்.. பிசிஓடி என்று சொல்லப்படும் நீர்க்கட்டிகளும் கரைந்துவிடும்.

குளிர்ச்சியை தரக்கூடிய சிறுகுறிஞ்சான் மூலிகையை, சூப் போல தயாரித்து குடிக்கலாம்., இதனால், உடல் உஷ்ணம், பித்தம் போன்றவை நீங்கும்.. சிறுகுறிஞ்சான் இலை பவுடரை, வெந்நீரில் கலந்து குடித்தாலே, உடல் குளிர்ச்சி பெறும். பித்தமும் தணியும்.. பசும்பாலில் இந்த பொடியை கலந்து குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குறைபாடுகள் நீங்கும்.. நரம்புகள் வலிமையடையும்.

உடல்எடை குறைவு: உடல் எடையை குறைக்கவும் இந்த சிறுகுறிஞ்சான் உதவி செய்கிறது.. கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பலப்படுத்த செய்கிறது. மஞ்சள் காமாலை சிகிச்சையில், இந்த இலைகளை மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.. இதன் இலையை சுத்தம் செய்து, கழுவி அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து, அனைத்தையும் கஷாயம் போல வைத்து குடித்தால், கொடிய காய்ச்சலும் விலகிவிடும்.

நுரையீரல் தொற்று உள்ளிட்ட சுவாச கோளாறுகளை, சிறுகுறிஞ்சான வேர்கள் குணப்படுத்துகின்றன.. சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்தும் சேர்ந்து தயாரான திரிகடகம் சூரணம், சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் இவைகளை குடித்துவரும்போது, நுரையீரல் கோளாறுகள், சளி, இருமல், கடும் காய்ச்சல், சுவாச தொற்று அனைத்தும் நீங்கிவிடும்,. நாள்பட்ட இருமலையும் சரிசெய்யக்கூடியது சிறுகுறிஞ்சான் வேர்கள்.. இதனை வெந்நீரில் போட்டு காய்ச்சி சுண்டவைத்து, வடிகட்டி குடிப்பார்கள்.

பக்க விளைவுகள்: இயற்கை மூலிகையான இந்த சிறுகுறிஞ்சானில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், சிலருக்கு பக்கவிளைவுகளையும் தந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல், உள்ளுக்குள் சாப்பிடக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+