தொப்பை குறையணுமா? காலை உணவில் "இது" இருந்தாலே போதும்.. சல்லுனு வெயிட் குறையும்.. சூப்பர் டிரிங்க்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடற்பயிற்சி + உணவுப்பழக்கத்தின் மூலம் மட்டுமே உடல்எடையை குறைக்கலாம் என்றாலும், ஒருசில டிப்ஸ்களை கடைப்பிடிப்பது, உடல் எடை குறைப்பதற்கு தூண்டுகோலாகின்றன.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு காலை உணவுகள் மிக முக்கியமானவை.. ஒரு ஆய்வு சொல்கிறது, தங்கள் உடல் எடையை சீராக பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களாம்..

Amazing Health benefits of Wheat Poha and Do you know Guava Leaves Water is the Super Loss Drinking

எனவே, காலை உணவு சரியாக இருந்துவிட்டால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலும், சுறுசுறுப்பும், சத்துக்களும் நமக்கு கிடைத்துவிடும்.

காலை உணவு: அந்தவகையில், வைட்டமின் C நிறைந்துள்ள உணவுகளை காலையில் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டுமாம். காரணம், உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை தரக்கூடியது இந்த வைட்டமின் C அதிகமுள்ள உணவுகள்தானாம்.. வைட்டமின் C, மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், செரிமானத்துக்கும் உதவி புரிகிறது..

எனவே, உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவற்றில் வைட்டமின் C அதிகம் நிறைந்திருக்கின்றன.

தக்காளி பழம்: பால், தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச்சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான சக்திகள் கிடைக்கின்றன.. அதேபோல ஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவதால், வைட்டமின் C ஓரளவு பெற முடியும்..

ஓட்ஸ் உணவுகளில் கலோரிகள் குறைவு.. கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம்.. பீட்டா குளூக்கன் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவை குறைக்கிறது.. சாதாரண ஓட்ஸையே வாங்கி, வேக வைத்து, அதில் தேன், பால், நட்ஸ்களை சேர்த்து சாப்பிட்டாலே போதுமான சத்துக்கள் கிடைக்குமாம். அல்லது, வெறும் ஓட்ஸிலேயே சிறிது காய்கறிகளை வேகவைத்து உப்புமா போலவும் சாப்பிடலாம்.

அவல் உணவு: அரிசி அவல்களைவிட, கோதுமை அவல்களில் நிறைய சத்துக்கள் உள்ளதாம்.. இந்த அவல்களில் டிபன் செய்து சாப்பிடுவதால் நல்ல எனர்ஜி கிடைக்கிறது. இப்படி காலை உணவுகளில் எது சாப்பிட்டாலும் இவைகளுடன் சேர்த்து, கிரீன் டீ ஒன்று குடிக்கலாம்.. காலை உணவை சரியாக எடுத்து கொள்ள முடியாத சூழலில், வேகவைத்த முட்டையை சாப்பிடலாம் அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம் என்கிறார்கள்.

வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சீரகம், பெருஞ்சீரகம், பட்டைத்தூள், சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம்.. அல்லது ஒரு ஸ்பூன் ஓமத்தை, தண்ணீரில் கலந்து, கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலும் தொப்பை கரையும்.. எலுமிச்சம் சாறு + இஞ்சி கலந்து தண்ணீர் குடிக்கலாம்..

அதேபோல, இறைச்சி சாப்பிட்டபிறகு, அரை மணிநேரம் கழித்து, சிறிது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதச்சத்து முழுவதும் ஊறச்செய்து, செரிமானம் ஆகிவிடும்..

கொய்யா இலைகள்: கொய்யா இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்... அல்லது கொய்யா இலையில் கசாயம் போல செய்து குடிக்கலாம்.. டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய உறுதுணையாக இருக்கும்.. அத்துடன், கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையுமாம்.

இதற்கெல்லாம் காரணம், கொய்யா இலைகளில், புரோட்டீன்கள், வைட்டமின் B6, C, கொலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.. அந்தவகையில், கொய்யாக்காயையும் தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+