மூங்கில் அரிசி.. இதென்ன ஆச்சரியம்.. 4 அரிசி சோறு சாப்பிட்டால் உடல் எடை ஈஸியா குறையுமா? பெஸ்ட் டிப்ஸ்
சென்னை: அரிசி உணவுகளை சாப்பிட்டும்கூட, உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம் என்கிறார்கள்.. எப்படி தெரியுமா?
அரிசி உணவை தவிர்த்துவிட்டு, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகளை உணவாக எடுத்து கொள்வது ஆரோக்கியம் என்பார்கள்.. அதேபோல, உடல் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் குறைக்க வேண்டியது அரிசி என்றும் சொல்வார்கள்..

உண்மையை சொல்லப்போனால், உடல் எடை குறைப்புக்கு பெரிதும் துணைபுரிவதே, அரிசி என்பதுதான் ஆச்சரியமான உண்மை... அதிலும் குறிப்பிட்ட 3 வகையான அரிசிகள், நமக்கு அபரிமிதமான மருத்துவ நன்மைகளை தருகின்றன. அவையெல்லாம் என்ன தெரியுமா?
சிவப்பு அரிசி: முதலாவதாக, சிவப்பு அரிசியை சொல்லலாம்.. செறிவான நார்ச்சத்துக்களின் மூல ஆதாரமாக இந்த சிவப்பு அரிசி விளங்குகிறது.. அஜீரணத்தை போக்கி, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.. இதனால், உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் எளிதில் வெளியேற்றி, குடல் இயக்கத்தையும் சீராக்குகிறது..
இந்த சிவப்பு அரிசியில் மாங்கனீசு சத்துக்களும், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களும் அதிகமாகவே உள்ளதால், உடலுக்கு தேவையான கலோரி எடுத்து கொள்வது இதன்மூலம் தடுக்கப்படுகிறது. அந்தவகையில், உடல் எடையை குறைக்க இந்த அரிசி பெரும் பலனை தருகிறது.
நார்ச்சத்துக்கள்: கருப்பு கவுனியை பொறுத்தவரை, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. எனவே, நார்ச்சத்துக்களின் உறைவிடம் என்றே இந்த அரிசியை சொல்லலாம்.. அதனால், கொஞ்சம் சாப்பிட்டாலும், வயிறு நிரம்ப சாப்பிட்ட உணர்வைத் தந்துவிடுகிறது..
வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது இந்த அரிசியை எடுத்து கொள்ளலாம்.. ஏராளமான ஊட்டச்சத்துக்களும், இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பும் இதில் அடங்கியிருப்பதால், உடல் எடையை குறைப்பவர்கள், இந்த அரிசியை தவிர்க்கவே கூடாது.
கருப்பு கவுனி: முக்கியமாக, கொலஸ்ட்ரால் தொந்தரவு உள்ளவர்கள், கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டால், எளிதில் கட்டுப்படுத்தலாம்... செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை என அனைத்தையுமே இந்த அரிசி தீர்ப்பதால் கல்லீரல் ஆரோக்கியம் பெறுகிறது.
பழுப்பு அரிசியின் பலனும் அபரிமிதமானவை.. கைக்குத்தல் அரிசியைதான் பழுப்பு அரிசி என்பார்கள். இந்த பழுப்பு அரிசியில் உள்ள காமா அமினோ பியட்ரிக் அமிலமானது, நம்முடைய உடலிலுள்ள கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றுகிறது.. நீக்குகிறது. உடல் எடையை குறைக்கும் நார்ச்சத்துக்களும், ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்களும் மிகுதியாக உள்ளதால், இந்த அரிசியையும் உணவில் தவிர்க்க கூடாது.
மூங்கில் அரிசி: இதில் அடுத்ததாக மூங்கில் அரிசியும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.. மூங்கில் மரத்தின் விதைகளையே, மூங்கிலரிசி என்பார்கள்.. பச்சை நிறத்தில் இருக்கும் இந்த அரிசி, கமகமவென வாசனையாக இருக்கும்.. சுவையோ, தித்திப்பாக இருக்கும்.. அதாவது கோதுமை சுவையுடன் இருக்கும்.
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் நிறைந்திருக்கின்றன.. ஆனால், கொழுப்பு சத்து குறைவாக உள்ளன.. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் இருக்கிறதாம். எனவேதான், நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உபயோகமாகிறது..
புரோடீன்: கெட்ட கொழுப்பின் அளவையும் குறைத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.. மற்ற அரிசிகளை விட இந்த அரிசியில் புரதச்சத்து அதிகம் என்பதை மறந்துவிடக்கூடாது..
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவை இந்த அரிசியில் உள்ளது கூடுதல் ஸ்பெஷாலிட்டியாகும்.. இந்த அமிலங்கள்தான், நம்மை தாக்கும் பல மோசமான நோய்களின் அபாயத்திலிருந்து நம்மை காக்கிறது.
டாக்டர் அட்வைஸ்: கர்ப்பிணிகளுக்கு வைட்டமின், மாதவிடாய், குறைபாடுகள் இருந்தாலும் அதையும் இந்த அரிசி நீக்கி விடும்.. ஆண்மை குறைபாடுகளை போக்கி, தாது விருத்தியடைய செய்ய இந்த அரிசிகள் உதவுகின்றன. எனவே, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த அரிசிகளை குறிப்பிட்ட அளவிலாவது உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியம் அடையலாம்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications