விட்டு விட்டு வருதா மாதவிடாய்? இதோ குட்டி குட்டி விதைகளே போதும்.. முறையற்ற மாதவிடாய் சீராகும் பெண்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்பு, தினை, ராகி போன்ற தானியங்கள், பெண்களுக்கு அருமருந்தாய் எப்படி திகழ்கிறது தெரியுமா? இதை பாருங்கள்

வழக்கமாக பெண்களுக்கு மாதவிலக்கு சமயங்களில், அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.. இதனால், உடல் சோர்வும், களைப்பும் மிகுதியாக தென்படும்.. களைப்பையும் நீக்கி, ரத்த இழப்பையும் ஈடுகட்ட வேண்டியிருக்கிறது.. முக்கியமாக இடுப்பு எலும்புகளுக்கு பலம் தரக்கூடிய புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்துக்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.

Amazing Medicinal Uses of Fenugreek and what are the Super food that women should eat during Menstruation Period

சத்து உணவு: இதுபோன்ற நேரங்களில் சத்தான உணவுகள் மட்டுமே பெண்களுக்கு கை கொடுக்கின்றன.. குறிப்பாக மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே, பெண்கள் உணவில் கவனம் செலுத்தினாலே போதும், இந்த பிரச்சனைகளை சரிசெய்துவிடலாம்.

முதலில், மாதவிலக்கு சமயத்தில் ரத்தப்போக்கு காரணமாக, உடலில் கிருமிகள் சேரலாம்.. இதனை தடுக்க வேண்டுமானால், சமையலில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு போன்ற மூலிகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உடலிலுள்ள நஞ்சுக்கள் வெளியேறி, ரத்தமும் சுத்தமடையும்.

அமிலங்கள்: அடுத்ததாக, மாதவிலக்கு ஆரம்பித்ததிலிருந்து 14 நாள் வரையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களும், அடுத்துள்ள 14 நாட்களுக்கு புரோஸ்டாகிளான்டின்ஸ் ஹார்மோன்களும் வேலை செய்ய வேண்டுமானால், கொழுப்பு அமிலங்கள் தேவைப்படுகின்றன. இந்த அமிலங்கள் சோளம், சோயாபீன்ஸ், வால்நட், மீன், முட்டைகளில் பிரதானமாக உள்ளதால், இவைகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியது பெருங்காயம். புரோட்டீன் நிறைய உள்ளதால், புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.. மாதவிடாய் சரியாக வராத பிரச்சனைக்கும், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனைக்கும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும், பெருங்காயமே மருந்தாகின்றன.. ஆனால், பெருங்காயத்தை கர்ப்பிணிகள் அதிகம் சேர்த்து கொள்ளாமல், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே பயன்படுத்துவது நலலது.

பச்சை காய்கறிகள்: அடுத்ததாக, பச்சை காய்கறிகள், கீரைகள் பழங்கள், தானியங்களுடன், இரும்புச்சத்து நிறைந்த ராகி, உளுந்து , கால்சியம் நிறைந்த முட்டை, பால், போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம். கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்ற தானியங்கள், மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் தசைபிடிப்பை நீக்குகின்றன.

மாதவிலக்கின்போது, உணவில் நெய் சேர்த்து கொண்டால், ஜீரண பிரச்சனை இருக்காது.. ஈஸ்ட்ரோஜன் அளவுகளை வெளியேற்ற செய்வதில் ஆளி விதைகளுக்கும் பங்கு இருக்கிறது.. இரும்பு சத்து அதிகரிக்க, முருங்கையிலையை சாப்பிட வேண்டும்..

குளிர்ச்சி: குளிர்ச்சி நிறைந்த வெந்தயத்தை, இதுபோன்ற மாதவிடாய் நேரத்தில் தவிர்க்க கூடாது.. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்டாகிளான்டின்ஸ்களை கட்டுக்குள் வைத்து, வயிறு வலியையும் போக்கும் சந்தி இந்த வெந்தயத்துக்கு உள்ளது. எனவே, 1 டம்ளர் நீரில், சிறிது வெந்தயத்தை ஊறவைத்து குடித்தாலே, உடல் சூடு குறைந்து, வயிறு வலியும் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+