கிடுகிடுன்னு பல் ஆடுதா? நெல்லிக்காய் ஒன்று போதுமே.. ஆடும் பற்களை இரும்பாக்கும்.. சூப்பர் டிப்ஸ்கள்
சென்னை: ஒருவருக்கு பற்கள் ஆடுகிறது என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல் ஆடுவதற்கு என்ன காரணம்? அதை ஆரம்பத்திலேயே எளிய முறையில் எப்படி சரிசெய்வது தெரியுமா?
பற்கள் ஆடுகிறது என்றாலே, நாம் உடனடியாக டாக்டரை சந்தித்து விடுவது முக்கியம்.. காரணம், ஈறுகளுக்கு வலு தந்து, 'சப்ளின்டிங் என்ற முறையில், ஆடும் பற்களை சரிசெய்வது உட்பட பல்வேறு சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொள்வார்கள்.

பற்கள்: எனினும், சிலருக்கு ஈறுகள் பலவீனம் அல்லது எலும்பு இழப்பு காரணமாக பற்கள் ஆட்டம் காணலாம்.. அல்லது மோசமான வாய்சுகாதாரத்தை சரியாக கடைப்பிடிக்காமல் இருந்தால் பற்கள் ஆடலாம். அல்லது பற்களில் காயங்கள் ஏற்படுவது, எலும்பு முறிவு, அதிகமான இனிப்பு உணவு சாப்பிடுவது, பற்கள் சிதைவடைவது போன்ற காரணங்களுக்காகவும் பற்களில் ஆட்டம் காணலாம்.
ஆரம்ப கட்டத்தில், இதுபோன்ற பிரச்சனைகளை, வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களை கொண்டு சரிசெய்யலாம்.. பற்கள் ஆரோக்கியம் பேண வேண்டுமானால், உணவு முறையிலேயே அதை கொண்டுவர வேண்டும்.
சமையல்: அந்தவகையில், பூண்டு, மிளகு, மஞ்சள் போன்றவைகளை சமையலில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். ஆடும் பற்களுக்கு இவைகள் எல்லாம் சிறந்த மருந்தாகும். ஆண்டிமைக்ரோபியல் பண்பு கொண்டவை என்பதால், எளிதில் எந்த தொற்றுகளும் அண்டாது.
இதில், பூண்டு பற்கள் 2 எடுத்து தட்டி, பற்கள் ஆடும் இடத்தில் வைத்தாலே நுண்ணுயிரிகள் நீங்குவதுடன், பற்களும் பலப்படும். மிளகு, மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், பலவீனமான பற்களையும் தடுத்து நிறுத்தும்.. இதனால் வலியுறும் கட்டுப்படும். அல்லது, மஞ்சள் தூள், மிளகுதூள் இரண்டையும் சேர்த்து ஈறுகளில் வைத்து மென்மையாக மசாஜ் செய்யலாம்.. இதனால் பற்களும், ஈறுகளும் வலுவடையும்.
பற்கள் நெல்லிக்காய்: அதேபோல, பற்களுக்கு நெல்லிக்காய் எப்போதுமே நல்ல மருந்தாகும்.. நெல்லிக்காய் இடித்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். அல்லது நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தாலே பற்கள் உறுதிப்பெறும்.
அல்லது நெல்லிக்காய் பவுடர், கால் கப் எடுத்து, அதில் மஞ்சள்- 1 ஸ்பூன், பட்டைப் பொடி - கால் ஸ்பூன், கிராம்புப் பொடி - அரை ஸ்பூன், உப்பு - 1 ஸ்பூன் என அனைத்தையும் கலக்க வேண்டும். இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய் கால் கப் ஊற்றி, இந்த கவலையை அதில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.
எண்ணெய்: இந்த எண்ணெய் மிகச்சிறந்த ஆயில் புல்லிங் போல செயல்படும்.. இந்த நல்லெண்ணைய்யை எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாய்க்குள்ளேயே வைத்திருந்துவிட்டு, பிறகு உமிழ்ந்துவிட வேண்டும்.. இதனால், ஈறுகள் பலப்படும். பற்களும் கெட்டிப்படும்.
அதேபோல, படிகார உப்பு - 6 ஸ்பூன், மிளகு -1ஸ்பூன், சாம்பிராணி - 1 ஸ்பூன், இந்துப்பு - 1 ஸ்பூன், ஓமம் - அரை ஸ்பூன், கிராம்பு - 2.5 ஸ்பூன், வேப்பம்பட்டை - 10 இவைகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இந்த பொடியில் பல் துலக்கினாலும் பலவீனமான பற்களுக்கு உறுதி கிடைக்கும். அல்லது கடுகு எண்ணெயில் உப்பு கலந்து வாயை கழுவி வந்தாலும் ஆடும் பற்கள் உறுதிப்படும்..
ஆலோசனைகள்: மொத்தத்தில் பற்களை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. சாப்பிட்ட பிறகு மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, வைட்டமின் D, கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுத்து கொள்ளலாம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications