குப்பைமேனி.. இந்த பொருளை குப்பைமேனி இலையுடன் சேர்த்தாலே.. தங்கம்போல மின்னும் உடம்பு.. மூலிகை தங்கம்
சென்னை: குப்பையில்தானே வளருகிறது என்று அலட்சியப்படுத்த முடியாத மூலிகை தங்கம்தான் இந்த குப்பை மேனி.. இந்த குப்பைமேனி தழைகள் நம்முடைய உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த குப்பைமேனி செடியில், அகாலிபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன..

சளி, இருமல், கோழைகளை வெளியேற்றக்கூடிய இந்த தழைகள், ஆஸ்துமாவையே குணப்படுத்தும் தன்மை கொண்டது.. தலைவலியால் அவதிப்படுபவர்கள், குப்பைமேனியை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து நெற்றியில் பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும்.. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த இலைச்சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். குப்பைமேனி இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, நரம்புகள் வலுப்படும்.. கால் வலி, மூட்டுவலிகள் நீங்கும்.
சளி, இருமல்: இந்த குப்பைமேனி இலைகளை பறித்து காயவைத்து, சூரணம் போல தேனில் கலந்து சாப்பிட்டு வந்தாலே, இருமல், இரைப்பு, சளி, கபம் நீங்கிவிடும்.. அல்லது இந்த குப்பை மேனி இலையை பறித்து காயவைத்து, பொடி செய்து, அந்த பொடியை, மூக்கில் வைத்து இழுக்க வேண்டும்.. இப்படி செய்தாலே, நெற்றி, தலையிலுள்ள பாரம் இறங்கிவிடும்.. நீர்கோர்த்திருந்தாலும், முழுக்க வடிந்துவிடும்..
தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் இருந்தால், குப்பைமேனி சாறு பிழிந்து, அதில் சுண்ணாம்பு கலந்து பூசினால் தொண்டை மீது தடவினால் குணமாகும்.
குழந்தைகள்: குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகளை அழிக்கவும் இந்த குப்பைமேனி உதவுகிறது.. இதன் தழையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் தந்துவந்தாலே போதும்.. வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியேறி விடும்.
இதுவே பெரியவர்களாக இருந்தால், குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிடும்போது, வயிற்றுப்புழுக்கள் வெளியேறிவிடும். சொத்தை பல் அல்லது பல் வலி இருந்தால், இந்த இலைகளை கழுவி, விரல்களாலேயே நசுக்கி, சொத்தை பற்களின் மீது வைத்தால் குறைபாடு நீங்கும்..
படுக்கைப்புண்: இந்த குப்பைமேனியின் வேர்கள்கூட நமக்கு மருந்தாகின்றது.. வயிற்றுப்போக்குக்கு இந்த அவர்களைதான் மருந்தாக தருவார்கள்.. சொறி, சிரங்கு, படுக்கைப்புண் என சரும வியாதிகளை விரட்டிக்கக்கூடியது இந்த குப்பைமேனி..
குப்பைமேனி இலையுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து உடம்பெல்லாம் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரும்போது, சொறி, சிரங்கு நீங்கிவிடும்.. இந்த இலையுடன், கற்றாழை ஜெல், கஸ்தூரி மஞ்சள் கலந்து முகத்தில் பூசினாலும், கரும்புள்ளிகள், பருக்கள், கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் நீங்கிவிடும்.
கஸ்தூரி மஞ்சள்: முகத்தில் பெண்கள் சிலருக்கு முடி வளரும்.. இந்த பூனை மீசை, தாடியை நீக்குவதற்கு கஸ்தூரி மஞ்சளை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.. குப்பை மேனியையும் கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
தோல்நோய்கள், நோய்த்தொற்றுகள், காயங்கள் போன்றவற்றுக்கு குப்பை மேனியிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுகிறது.. அதாவது குப்பைமேனி இலைகளை பேஸ்ட் போல அரைத்து, அதன் சாற்றை மட்டும் வடிகட்ட வேண்டும்.
எண்ணெய்: ஒரு வாணலில், இந்த சாறு ஊற்றி, அதே அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் சமமாய் சேர்த்து, சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த எண்ணெய்யை மட்டும் ஆறவைத்து எடுத்து கொண்டால், குப்பைமேனி எண்ணெய் ரெடி. கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு இந்த எண்ணெய் உதவுகிறது.. மூட்டு வலிகள் இருந்தாலும், இந்த எண்ணெய்யை ஒத்தடம் போல தரலாம்.
குப்பைமேனி இலையுடன் 2 மிளகை சேர்த்து அரைத்து, தினமும் காலை எழுந்ததும் உணவுக்கு முன்பு, சாப்பிட்டு வந்தாலே ரத்தம் சுத்தமாகும். குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி நெல்லிக்காய் அளவு 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வாயுக்கோளாறுகள் நீங்கும்..
பாம்பு கடி: பாம்பு கடித்தாலும்கூட, விஷ முறிவாக இந்த குப்பைமேனி இலைகளைதான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த குப்பை மேனி இலைகளுடன், சின்ன வெங்காயம், வாழைப்பூ போன்றவற்றை சேர்த்து அரைத்து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும், மூலநோய் காரணமாக ரத்தம் வருவது நிற்கும்.
நல்லதை தந்தாலும்கூட, குப்பைமேனி இலையை அளவுடன் எடுத்து கொள்ள வேண்டும்.. அதிலும், குப்பைமேனியை மருந்தாக உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுறு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால், எதுவானாலும் நஞ்சுதானே?
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications