வெஜிடபிள் வயாகரா "பீட்ரூட்" ! புதுசா கல்யாணம் ஆனவங்க நோட் பண்ணுங்க! ஆனா மருத்துவர்கள் சொல்வது என்ன
டெல்லி: பீட்ரூட்டை நாம் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் அது உடலுறவுக்கு உதவும் என்று தகவல் பரவும் நிலையில், இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.
பீட்ரூட்டில் பல நன்மைகள் கொட்டி கிடக்கிறது. பீட்ரூட் சாப்பிட்டால் அது இதயத்திற்கு நல்லது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், அஜீரண பிரச்சினையைத் தீர்க்கும். இப்படி பீட்ரூட் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

பீட்ரூட்: பெர்ரி, நட்ஸ், கீரைகளைப் போலவே பீட்ரூட் கூட ஒரு சூப்பர்ஃபுட் தான்.. அதில் ஒரு சில வைட்டமின்கள் மற்றும் தாதுகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் சி, தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளன. பெரும்பாலும் நீங்கள் எப்படிச் சமைத்தாலும் அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் குறைவதில்லை. பிரஷர் குக்கரில் போட்டு வேக வைத்தால் மட்டும் கரோட்டினாய்டு என்ற ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் குறைகிறதாம்.
சரி விஷயத்திற்கு வருவோம். சிலர் பீட்ரூட்டை ஒரு வெஜிடபிள் வயாகரா என்று சொல்கிறார்களே.. அது உண்மை தானா என்று பார்க்கலாம். பண்ட ரோமானியர்கள் பீட்ரூட்டையும் அதன் சாற்றையும் பாலுணர்வைத் தூண்ட பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், அறிவியல்பூர்வமாக இதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே இருக்கிறது. அதேநேரம் நன்மை இல்லை என்றும் முழுமையாக நிராகரித்துவிட முடியாது.
உடலுறவை அதிகம் வைத்தால் உடல் எடை குறையும்.. ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட்! மருத்துவர்கள் தரும் விளக்கம்
ஓரளவுக்கு உதவும்: அதாவது நாம் பீட்ரூட்டை உண்ணும் போது, நமது வயிற்றில் இருக்கும் பாக்டீரியா மற்றும் என்சைம்கள் பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். நைட்ரிக் ஆக்சைடு அதிகம் இருக்கும் உணவுகளாகப் பீட்ரூட், கீரை ஆகியவை இருக்கிறது. இதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
இந்த நைட்ரிக் ஆக்சைடு ஆண்களில் உடலுறவுக்கு முன்னும் பின்னும் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் டெஸ்டோஸ்டிரோனுக்கு பக்க பலமாக இருக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பீட்ரூட்டின் திறன் இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு மிகப் பெரியளவில் பயனளிக்கும். எனவே, இப்படிப் பார்க்கும் போது பீட்ரூட் பாலியல் உறவுக்கு ஓரளவுக்குப் பயன்படவே செய்கிறது. இருப்பினும், அது முற்றிலுமாக மாற்றி விடாது.
இதர நன்மைகள்: பீட்ரூட் அதன் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் பண்புகளால் பலரையும் கவர்ந்து இருக்கிறது. பீட்ரூட் புற்றுநோய் மற்றும் நீரிழிவு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைக்காகப் பயன்படும். அதாவது பீட்ரூட்டை மருந்துகளுக்குப் பதிலாக எடுத்த கொள்வதை விட மருந்துகளுடன் சேர்த்து இந்த பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். அது மிகப் பெரியளவில் நமது உதவியாக இருக்கும்.
அதேபோல ரத்த அழுத்தம் இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அது ரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். பீட்ரூட் சாப்பிடும் போது அது சில மருந்துகளுக்கு இணையான பலனைத் தருவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ரத்த அழுத்தப் பிரச்சினை இல்லாதவர்கள் இதை எடுத்துக் கொண்டாலும் அது ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கும் இது பல வகையிலும் உதவுமாம்.
எப்படிச் சாப்பிடலாம்: பீட்ரூட்டை நீங்கள் பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்தும் சாப்பிடலாம். மேலும், ஜூஸ், சூப் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் பீட்ரூட்டில் இருக்கும் நன்மை குறையாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் இத்தனை நன்மைகள் கொட்டி கிடக்கும் நிலையில், இதில் எதாவது பிரச்சினை இருக்கிறதா என்ற கேள்வி வரும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பீட்ரூட் சாப்பிடுவதால் எந்தவொரு உடல்நிலை பாதிப்பும் ஏற்படாது.
அளவுக்கு அதிகமாகப் பீட்ரூட்டைச் சாப்பிட்டால் மட்டும் உங்கள் சிறுநீர் சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறலாம். இதை பீடூரியா பாதிப்பு என்பார்கள். ஆனால், இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
இறுதியாக என்ன: அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பீட்ரூட் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுறவுக்கு ஓரளவு உதவுகிறது உண்மை தான். ஆனால், அது உங்கள் பாலியல் வாழ்க்கையை மொத்தமாக மாற்றாது.. அது காய்கறி வயாகராவாக செயல்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் பீட்ரூட்டில் பல நன்மைகள் கொட்டி கிடப்பதால் தாராளமாக நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications