உடலுறவை அதிகம் வைத்தால் உடல் எடை குறையும்.. ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட்! மருத்துவர்கள் தரும் விளக்கம்
டெல்லி: உடல் எடையைக் குறைக்க உடலுறவு உதவுமா என்பது இங்கே பலருக்கும் இருக்கும் சந்தேகம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல் இருப்பதால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கிறது. இதனால் பலரும் உடல் எடையைக் குறைக்கத் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

அதேநேரம் சிலர் அடிக்கடி உடலுறவு கொண்டால் உடல் எடையைக் குறையும் எனச் சொல்கிறார்கள். அது உண்மை தானா.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உடலுறவு: உடல் எடையைக் குறைப்பதில் உடலுறவு கணிசமாக உதவவே செய்யும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். உடல் அசைவுகள் இதயத் துடிப்பை அதிகரிக்கும். இது கலோரிகளை எரிக்க உதவும் என்பதால் உடலுறவை "கார்டியோ" வகை உடற்பயிற்சி என வகைப்படுத்தலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 2013ஆம் ஆண்டில் இது தொடர்பாக ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் உடலுறவு சமயத்தில் ஆண்கள் சராசரியாக 101 கலோரிகளையும் பெண்கள் 69 கலோரிகளையும் செலவிடுவது தெரிய வந்துள்ளது. அதாவது ஆண்கள் நிமிடத்திற்கு 4.2 கலோரிகளையும் பெண்கள் 69 கலோரிகளையும் செலவிடுகிறார்கள். ஆனால், அனைவரும் இதே அளவுக்கு தான் கலோரிகள் செலவாகும் எனச் சொல்ல முடியாது.
குறைக்க உதவும்: இது எவ்வளவு நேரம், எந்தளவுக்குத் தீவிரம், வேகம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். சராசரியாக 80 முதல் அதிகபட்சம் 300 கலோரிகளை உடலுறவின் போது செலவிடலாம். 300 கலோரிகளை என்றால் எவ்வளவு என்ற சந்தேகம் வரலாம். அதாவது நமது உடலில் 1 கிலோ என்பது சுமார் 7,700 கலோரிகளுக்குச் சமம். எனவே, சராசரியாக, உடலுறவு மூலம் சுமார் 0.034 கிலோ, அதாவது 34 கிராம் உடல் எடையைக் குறையும்.
"விந்தணு" முதல் "ஆணுறை" வரை எல்லாமே பிரச்சினை தான்.! அலறும் இளம்பெண்.. இது என்ன வினோதமாக இருக்கே
மறைமுக பலன்கள்: உடலுறவு என்பதை கார்டியோ பயிற்சி போல இருப்பதைத் தவிர, அது உடலியல் மற்றும் உளவியல் நன்மைகளையும் நமக்கு அளிக்கிறது., டோபமைன் அதிகம் வெளியே வரும். இதன் மூலம் நல்ல மனநிலையுடன் இருப்பீர்கள். இது நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.
ஆண்- பெண் இருவரில் யாருக்கு இதில் அதிக பலன் கிடைக்கும் என்ற கேள்வி வரலாம். உடல் எடை குறைவு என்று வரும் போது ஆண்- பெண் இருவரில் யாருக்கு நன்மை அதிகம் என்பதைக் காட்ட டேட்டா இல்லை. இரு தரப்பிற்கும் கணிசமான பலன் கிடைக்கும். இது மனநிலையை மேம்படுத்துவதால் மறைமுகமாக இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதிகம்.
ட்விஸ்ட்:அதேநேரம் வெறுமன உடலுறவு மூலமாக மட்டும் நம்மால் உடல் எடையைக் குறைத்துவிட முடியாது. உடலுறவால் எடை குறைப்பில் நேரடியாகக் கொஞ்ச நன்மைகளும் மறைமுகமாகப் பல நன்மைகளும் இருந்தாலும் அதை மட்டுமே செய்தால் உடல் எடையைக் குறைத்துவிட முடியாது. உடல் எடை குறைப்பிற்குத் தீவிர உடற்பயிற்சியும் கட்டுக்கோப்பான டயட்டும் நிச்சயம் தேவை.
இங்கே நாம் மற்றொரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உடலுறவு என்பது பரஸ்பர இன்பம் மற்றும் நெருக்கம் ஆகியவற்றுக்கு தான். அதுவே உடலுறவின் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். கலோரிகளை எரிப்பது போனஸாக கிடைக்கும் நன்மையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பது தான் முக்கியம். எனவே, அதில் கவனத்தைச் செலுத்துங்கள். அதைவிட்டுவிட்டு கலோரிகளை எரிப்பதில் கவனத்தைச் செலுத்தினால் கிடைக்கும் நன்மைகளும் கிடைக்காது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications