முருங்கையிலை நீர்.. வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை தண்ணீரை குடித்தால் ஒரே அற்புதம்.. வாவ் மொரிங்கா
சென்னை: காலையில் வெறும் வயிற்றில் முருங்கை தண்ணீரை குடிப்பதால், ஆரோக்கியமான வாழ்வை நம்மால் பெற முடியும்... முருங்கைக்கீரை தண்ணீரை தினமும் குடிப்பதால், ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்க்கலாம்.
முருங்கைக்கீரையில் வைட்டமின் A,B,C, சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட கணக்கிலடங்காத சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன.

வெறும் முருங்கையிலையை தண்ணீர் ஊற்றி வேகவைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே , ஏராளமான நோய்கள் குணமாகின்றன.. தேவைப்பட்டால், இந்த முருங்கை நீரில் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது நெல்லிக்காய் சாறையும் கலந்து குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி: அதாவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால், வாரம் 2 முறையாவது, முருங்கை சூப் அல்லது முருங்கை ஜூஸ் குடிக்க சொல்கிறார்கள்.. ஒருவேளை இவைகளை தயாரிக்க முடியாத சூழலில், வெறுமனே முருங்கை தண்ணீரை குடித்து வரலாம். டீ காபிக்கு பதிலாக இதனை குடித்துவரும்போது, ஆற்றலும், சுறுசுறுப்பும் கிடைக்கும்.
முருங்கையிலைகளை சுத்தம் செய்து, காயவைத்து, அதை பவுடராக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கலாம். அதேபோல, புதிய முருங்கை இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். தினமும் காலையில் இந்த தண்ணீரை குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இரும்புச்சத்துக்கள்: வெறும் வயிற்றிலேயே குடிப்பதால், முருங்கை இலையிலுள்ள வைட்டமின் A, C, E, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள் என அத்தனை ஊட்டச்சத்துக்களையும் நம்மால் பெற முடியும்.
ரத்த சோகை பிரச்சனையை முருங்கையிலைகள் தீர்க்கின்றன.. முழங்கால் வலி, மூட்டு வலி, எலும்பு வலி, வாத நோய், போன்ற தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம். இந்த முருங்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், வலி நிவாரணி பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகளும் உள்ளதால், வீக்கத்தை குறைத்து வலியையும் குறைக்க உதவுகிறது.
உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் டிரிங்க் என்றே சொல்லலாம். காரணம் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதால், அபரிமிதமான ஊட்டச்சத்தினை இந்த முருங்கை நீரிலிருந்து பெற முடியும்..
நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்து அதிகம் நிறைந்த முருங்கையானது, செரிமானம் பிரச்சனையை நீக்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.. இதில், குளுக்கோசினோலேட்ஸ் , ஐசோதியோசயனேட்ஸ் போன்ற ஆரோக்கியமான கலவைகள் உள்ளதால், குடலை சுத்தப்படுத்துவதில் பேருதவி புரிகின்றன. முருங்கையிலுள்ள வைட்டமின் C, பீட்டா கரோட்டின் போன்றவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. காய்ச்சல், சளி என எந்த நோய்களும் அண்டவிடாது.. சரும தொந்தரவுகளும் விலகிவிடும்..
முருங்கை தண்ணீர் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.. இயற்கையாகவே நச்சு நீக்கும் தன்மை இந்த முருங்கைக்கு உள்ளதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த தூண்டுகிறது. வாய்ப்புண்ணும், வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது.. முருங்கை கீரை சாறு, குடித்து வந்தால் உடல் சூடு மெல்ல தணிந்துவிடும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், போன்ற தொந்தரவுகளும் நீங்கும்.
சரும பிரச்சனைகள்: முடி உதிர்தல், சரும பிரச்சனைகள், மெல்லிய உடையக்கூடிய எலும்புகள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த முருங்கை தண்ணீரை தவறவிடக்கூடாது.வெறும் முருங்கை சாறு குடித்து வருபவர்களுக்கு தோல் நோய்களே வருவது கிடையாது. ஆஸ்துமா போன்ற நோய்களையும் அண்ட விடுவதில்லை இந்த முருங்கை சாறு.












Click it and Unblock the Notifications