அதிமதுரம் அசத்துதே.. முடி கொட்டிட்டே இருக்கா? இளநரை தொல்லையா? கருகரு முடிக்கு நெல்லிக்காய்.. சூப்பர்
சென்னை: தலைமுடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. இதற்கு ஒரே ஒரு பொருளை வைத்து தீர்வு காணலாம். எப்படி தெரியுமா?
பொதுவாக, தலைமுடி உதிர்வது குளிர்காலத்தில் அதிகமாகவே நடக்கும்.. போதாக்குறைக்கு முடி வறட்சி, அரிப்பு, போன்ற பிரச்சனையும் ஏற்படும்.. எப்போது தலைமுடியில் வறட்சி தொடங்குகிறதோ, அப்போதே தலைமுடி வலுவிழக்க துவங்கிவிடுகிறது.

குளிர்காலம்: அதுவும் இல்லாமல் குளிர்காலத்தில் அதிகமாக வியர்ப்பதில்லை என்பதால், உடலில் நச்சுத்தன்மை அதிகமாகும்போது, முடி உதிர்தலும் நிறையவே நிகழ்கிறது..
ரத்தசோகை இருப்பவர்களுக்கு தலைமுடியில் சத்து கிடைக்காது.. ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களுக்கும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்காது. அதேபோல, டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தலைமுடி உதிர்தல் அதிகமாகவே இருக்கும்.. கருத்தடை போன்ற மருந்துகளை பயன்படுத்தி இருந்தாலும் பெண்களுக்கு நிறைய முடி கொட்டலாம்..
தலைமுடி: முடி உதிர்வை தடுக்க எத்தனையோ எளிய வழிமுறைகள் உள்ளன என்றாலும், நெல்லிக்காய், அதிமதுரம் என்ற 2 விதமான இயற்கையான பொருட்களை வைத்து எப்படி தலைமுடியை காக்கலாம் தெரியுமா?
ஆலிவ் ஆயிலை தலைக்கு ஊற வைத்து குளித்து வரலாம்.. அல்லது செக்கில் வாங்கிய தேங்காய் எண்ணெய்யுடன், நெல்லிக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட தைலத்தையும் சேர்த்து தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நிற்கும்.. நெல்லிக்காயில் வைட்டமின் C உள்ளதால், தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது. அல்லது, நெல்லிக்காய் பவுடரையும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
செம்பருத்தி இலை: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் இவைகளுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் போன்று காய்ச்சி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தாலே, முடி உதிர்வது நிற்கும்..
அல்லது நெல்லிக்காயுடன், மாங்காய் சேர்த்து விழுதாக அரைத்து தலைக்கு தேய்த்து, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
அதிமதுரம்: அதேபோல, தலைமுடிக்கு அதிமதுரம் பயன்படுத்தலாம்.. அதிமதுரத்தில் ஃபிளவனாய்டுகள் நிறைய உள்ளதால், மிகச்சிறந்த ஊட்டச்சத்து தலைமுடிக்கு கிடைக்கிறது.. அதாவது, தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியடைய செய்யும் தன்மை இந்த அதிமதுரம் பவுடருக்கு உண்டு.. அதனால், மாதம் ஒருமுறையாவது அதிமதுரத்தை ஹேர்பேக்காக பயன்படுத்தினால், ரத்த ஓட்டமும் தலைமுடியில் அதிகரிக்கும்.
இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு அதிமதுரம் உதவுகிறது.. நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் வாங்கி, அதை பவுடராக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் தேய்த்து மசாஜ் போல செய்ய வேண்டும்.. பிறகு அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால், இளநரை மறைய துவங்கும்..
வழுக்கை தலை: இளமையிலேயே வழுக்கை தலை இருப்பவர்கள், அதிமதுரத்தை எருமைப்பால் விட்டு விழுதாக அரைத்து, முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து குளித்து வர வேண்டும். அதேபோல, பொடுகு தொல்லை இருப்பவர்களுக்கும் இந்த அதிமதுரம் உதவுகிறது.
அதிமதுரம், நெல்லிக்காய் இரண்டையுமே, கடுகு எண்ணெய்யுடன் கலந்து தலைமுடிக்கு ஹேர்பேக் போட்டு வந்தால், முடி உதிர்தல் குறையும்..
இளநரை: அதேபோல, இளநரை உள்ளவர்கள் அகஸ்திய ரசாயனம் தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்குமாம். அல்லது கரிசலாங்கண்ணி தூளை, பசும்பாலில் கலந்து குடித்து வந்தாலும், தலைமுடி உதிர்வது நிற்பதுடன், தலைமுடியும் அடர்த்தியாக வளரும். ஆனால், இதுபோன்ற சூரணங்களை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது மிகவும் முக்கியமாகும்.
அல்லது தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி, கறிவேப்பிலைகளை அதில், போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்து வந்தாலும் பலன் கிடைக்கும். அல்லது கறிவேப்பிலை விதையை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து, அந்த எண்ணெய்யை தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காய்யை சாப்பிட்டு வருவது அதைவிட பலன்தரும். அதேபோல, நெல்லிக்காய் பவுடருடன், சிறிது எலுமிச்சம் சாறு கலந்து தலையில் அப்ளை செய்து ஊறவிட வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை கழுவி விட வேண்டும். இதனால் தலைமுடியின் நிறம் மாற துவங்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications