20 ஆண்டுகளாக தும்மல்.. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்.. இப்படி கூட நடக்குமா!
பெய்ஜிங்: சுமார் 20 ஆண்டுகளாக ஒருவருக்குத் தும்மல் மற்றும் சளி பிரச்சினை இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாக இருக்கவே அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது தான் அவரது மூக்கில் பகடை ஒன்று இத்தனை காலம் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்தில் அது அகற்றப்பட்டதால் அவர் பிழைத்தார். இல்லையென்றால் உயிரே போய் இருக்கும் ஆபத்து இருக்கிறது.
வடக்கு சீனாவில் உள்ள ஷாங்க்சி மாகாணத்தைச் சேர்ந்த நபருக்கு சுமார் 20 ஆண்டுகளாகத் தொடர் தும்மல் பிரச்சினை இருந்துள்ளது. ஏதோ அலர்ஜி காரணமாக இப்படி இருக்கலாம் என்று அந்த நபரும் அப்படியே விட்டுவிட்டார்.

இதற்கிடையே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே அவரது மூக்கில் டைஸ், அதாவது தாயம் விளையாடப் பயன்படும் பகடை சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விரிவான செய்தியைச் சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
20 ஆண்டுகளாகப் பிரச்சினை: சீனாவின் சியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் க்சியமோ. 23 வயதான க்சியமோ என்பவருக்குச் சின்ன வயதில் இருந்தே நாசியில் சிக்கல் இருந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதமாக அவருக்கு நிலைமை ரொம்பவே மோசமாகியுள்ளது. தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற சிக்கல் அதிகரித்துள்ளது. இதனால் அந்த இளைஞர் முதலில் பாரம்பரிய சீன மருத்துவம் மூலம் சுய சிகிச்சை அளிக்க முயன்றுள்ளார். இருப்பினும், அது பலனளிக்கவில்லை.
இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது தான் அவருக்கு நாசியழற்சி இருப்பது தெரிய வந்துள்ளது. நாசி பகுதியில் ஏதோ ஒரு பொருள் அடைத்து இருப்பதும் இதன் காரணமாகவே அவருக்குப் பிச்சினை இருப்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நாசி குழியில் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. அப்போது தான் நாசி குழியில் பகடை ஒன்று சிக்கியிருப்பது தெரிய வந்தது.
பகடை: இது தொடர்பாக எண்டோஸ்கோபி செய்த மருத்துவர் கூறுகையில், "நாசியில் எண்டோஸ்கோபி செய்யும் போது தான் உள்ளே ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். வெள்ளை நிறத்தில் அழுக்கு படிந்து இருந்த அந்த பொருளை வெளியே எடுத்தோம். சுத்தம் செய்து பார்த்ததில் அது சுமார் இரண்டு செ.மீ அளவில் இருக்கும் பகடை என்பது தெரிய வந்தது.
இந்த பகடை பல ஆண்டுகள் அவரது மூக்கில் நாசி குழிக்குள் சிக்கி இருந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட அலவு அது அரிக்கப்பட்டு இருந்தது. இத்தனை காலம் சிக்கி இருந்ததால் நாசியின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். தொடர்ந்து ஆப்ரேஷன் மூலம் அந்த பகடை அகற்றப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு வயதாக இருந்தபோது தற்செயலாக இந்த பகடை மூக்கில் சிக்கியிருக்கலாம் என அந்த இளைஞர் கூறுகிறார். ஆனால், இது தொடர்பாகத் தெளிவாக அவருக்குத் தெரியவில்லையாம்.
உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்: இன்னும் சில காலம் அந்த பகடையை அவர் அப்படியே விட்டிருந்தால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்து இருக்கும். ஏனெனில் பல ஆண்டுகளாகப் பகடை மூக்கிலேயே இருந்ததில் அதைச் சுற்றியுள்ள திசுக்களில் ஒட்டிக்கொண்டது. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும் மூச்சு குழாயை அடைத்து இருக்கும். இதனால் மூச்சுத்திணறலும் கூட ஏற்பட்டு உயிரே போய் இருக்கும். என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
குழந்தைகள் இருந்தால் கவனம்: வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் விளையாட்டுப் பொருட்களைத் தரும் முன்பு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications